Sunday, February 2, 2014

ஜேவிபி யின் புதிய தலைவராக அனுர குமாரா திஸாநாயக்க தெரிவு.

ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7 ஆவது தேசிய மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்றிலிருந்து இடம்பெற்று வருகின்றது. மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுத்தலைவரும் மத்திய குழு உறுப்பினருமான அனுர குமார திசாநாயக்க ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் 30 பேர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம் 30 பேரில் ஒரே ஒரு தமிழர் அடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய குழு கூடுகின்றபோது பொதுச்செயலளார் தெரிவு செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய குழு உறுப்பினர்களின் பெயர் விபரம் வருமாறு:

• Somawansa Amarasinghe

• Tilvin Silva

• Anura Disanayaka

• Vijitha Herath

• Lal Kantha

• Bimal Ratnayaka

• Sunil Handunneththi

• Jinadasa Kithulegoda

• R. Chandrasekar

• Lakshman Nipunarachchi

• Nihal Galappaththi

• Samantha Vidyaratna

• Mahinda Jayasinghe

• Nalinda Jayatissa

• Gamini Ratnayaka

• Wasantha Piyatissa

• Attorney at Law Sunil Watagala

• Samanmalee Gunasinghe

• H.P. Dhammika

• Chandrika Adhikary

• Wasantha Samarasinghe

• Samantha Koralearachchi

• Sumathipala Manawadu

• M.D. Wijeratna

• Sisira Kumara Wahalathanthri

• Namal Karunartna

• Nalin Hewage

• T.B. Sarath

• Sudath Balagalla

• Janaka Adhikary


இதேநேரம் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள சோமவன்ச அமரசிங்க, புரட்சியாளர்களுக்கு என்றுமே ஓய்வு இல்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணி கடந்தகாலங்களை போல எதிர்காலங்களில் பல்வேறு மாற்றங்களுடன் வெற்றிபாதையுடன் முன்னோக்கி நகரும் என்றும் தெரிவித்துள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com