Tuesday, February 25, 2014

அமைச்சர் மைத்திரிபால சொன்னது ஒன்று… ஊடகச் செய்தி மற்றொன்று…! ஆதங்கப்படுகிறார் அமைச்சர்

இன்று (25) ஊடக அமைச்சின் கொழும்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு டெங்கு பற்றிய கருந்தரங்கொன்று சுகாதார அமைச்சினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

அங்கு உரையாற்றிய அமைச்சர் மைத்திரிபால தெரிவித்தாவது -

எனது 25 வருட பாராளுமன்ற வாழ்வு பற்றி ஒரு நேர்காணலைக் காண்பதற்கு பிரபல சிங்களப் பத்திரிகையின் ஞாயிறு இதழில் பிரசுரிக்கஒர் ஊடகவியலாளர் என்னை கடந்த புதன்கிழமை நேர்கண்டார்.

அவர் என்னை நேர்கண்டபோது, மறக்க முடியாத சம்பவங்கள் ஏதும் உண்டா? எனக் கேட்டார். அதற்கு நான் பாரளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மட்டும் எனது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் எனத் தெரிவிக்கின்றேன்.

“நான் முதன் முதலில் 92ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருக்கும்போது முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானமொன்று ஆளும் கட்சிஎ திர்க்கட்சியினர் அன்று கொண்டு வந்தார்கள். அப்போது> சபாநாயகராக எம்.எச்.முஹம்மத் பதவிவகித்தார். அவர் அந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை ஏற்காது இருந்தார். அதற்காகவே நான் திடிரென பாராளுமன்றத்தில் எழுந்து கௌரவ “பக்காநாயக்க அவர்களே” என்று சபையில் சொன்னேன்.

உடனே சபாநாயகர் கோபமுற்று அவ்வாசனத்தை உடனடியாக வாபஸ் பெறவும் எனத் தெரிவித்தார். நான் மீண்டும் பகாநாயக்க அவர்களே என்று கூறினேன். உடன் அவர் வெளியில் நின்ற பொலிசாரை அழைத்து என்னை வெளியில் தூக்கிக் கொண்டு போகும்படி உத்தரவிட்டார். உடன் உள்ளே 6 பொலிசார் வந்து என்னைத் தூக்கிக் கொண்டு வெளியே போட்டார்கள். அதுதான் எனது பாராளுமன்ற வாழ்வில் மறக்க முடியாத சம்பவம். (சிங்களத்தில் பகாநாயக்க என்ற அர்த்தம் (களவாக பணம் பெற்ற)பெற்ற சபாநயகரே என்ற அர்த்தமாகும்.)

இதனை சரியாக எழுதி கொடுத்திருந்தார் என்னை நேர்கண்ட ஊடகவியலாளர். அதனை அந்த பிரபல பத்திரிகையில் பிரசுரிக்க முன் எழுத்துப் பிழைபார்த்தவர் “பக்கா”நாயக்க அவர்களே என்ற வசனத்தை சபாநாயகரே என்று திருத்தியிருந்தார். பத்திரிகையில் வெளிவந்தபின் என்னிடம் பலர் கேள்வி கேட்கின்றனர். சபாநாயகர் என்றுசொன்னதுக்கு உங்களை ஏன் பொலிசார் வெளியில் கொண்டு போட்டார்கள்.

இதுதான் ஒரு வசனத்தை பிழை திருத்தி மாற்றியதால் அந்த நேர்காணில் அர்த்தமே இல்லாமல் போகிவிட்டது எனஅமைச்சர் மைத்திரிபால சிறிசேன அங்கு வருகை தந்திருந்த ஊடகவியளாலருக்கு இதனை நீங்கள் பாடமாகக் கொள்ளவும் எனவும் தெரிவித்தார்.

(அஷ்ரப் ஏ சமத்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com