Friday, February 28, 2014

இரணைமடுவை வைத்து அரசியல் செய்ய கூட்(த்)டமைப்பு தீர்மானம்! கூட்டமைப்புக்கு இரணைமடுவில் கண்டம்

தமிழ் மக்களின் ஆதரவு தமக்கு தான் இருக்கிறது என காட்டி தமிழ் மக்களுக்கு இனவாதக் கருத்துக்களை கூறி வாக்குகளைப் பெற்று செயற்பட்டு வரும் கூட்டமைப்பு தற்போது இரணைமடு விவகாரத்தை கையில் எடுத்து அரசியல் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

கிளிநொச்சி மக்களின் கோரிக்கையை கவனத்தில் எடுக்க வேண்டும் என சிறிதரன் எம்.பி அவ்வப்போது அறிக்கை விடுவதும் கிளிநொச்சி மக்களை ஏவி விடுவதும் வழமையாகிவிட்டது.

ஆனால், கூட்டமைப்பின் தலைமை இரணைமடு தண்ணீரை எப்படியாவது யாழ் கொண்டு போகவேண்டும் என்றும் அப்படி கொண்டு போனால் தான் யாழ் மக்களின் வாக்குகளைப் பெற முடியும் எனவும் கருதுகிறது. இதில் மாவை சேனாதிராஜா, சுரேஸ், விக்கி, சுமந்திரன், சரவணபவன் ஆகியோர் விடாப்பிடியாக நிற்கின்றனர். இவர்கள் படுகின்ற பாட்டைப் பார்க்க பாராளுமன்றத் தேர்தல் வரப்போகுது போல தான் இருக்கிறது.

இவ்வாறு இரு பகுதி மக்களையும் திருப்திப்படுத்துவது போன்று நடிப்பது அரசியல் இருப்புக்கே அன்றி தமிழ் மக்களின் தேவையில் கருத்தில் கொண்டு இல்லை என்பது வெளிப்படை. ஏனெனில் கிளிநொச்சி மக்கள், யாழ் மக்கள் என இரு பகுதி மக்களின் கருத்துக்களையும் சமாளிக்கும் செயற்பாட்டில் இருக்காமல் நீதியாக ஒரு கருத்தை எல்லா உறுப்பினர்களும் இணைந்து வெளியிட முடியுமா? அல்லது தமது கருத்துக்கள் மக்கள் கருத்துக்கள் ஆயின் அதனை ஏற்றுக் கொள்ளாத உறுப்பினர்களை வெளியேற்ற முடியுமா? அதுவும் இல்லையென்றால் மக்களுக்காக கதைப்பவர்களாவது வெளியேற முடியுமா? எதுவுமே முடியாது. ஏனெனில் உங்களுக்கு தேவை கதிரை மட்டுமே.ஏன் என்றால் மக்கள் குழம்பி விடுவார்கள். அதனால் வாக்கு கிடைக்காது என்ற பயம்.

தமிழ் மக்களுக்கு தண்ணியில் கண்டம் என்று தலை எழுத்தாகிவிட்டது. மாவிலறு மறிக்கப் போய் யுத்தம் இடம்பெற்று புலிகள் அழிந்தார்கள். புலிகளின் தலைவர் பிராபகரனும் நந்திக் கடலிலேயே கடைசியாக சரணாகதி அடைந்தார்.

இப்ப கூத்தமைப்புக்கும் சனியன் ஆரம்பிச்சிட்டு. அவர்களின் ஓட்டுமாட்டுக்கள் மக்களுக்கு விளங்கி விட்டது. இதனால் இரணைமடு தண்ணியுடன் கூட்டமைப்பின் பயணத்திற்கும் அஸ்தமனம் ஆரம்பிச்சுட்டு..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com