மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு அளவீடு செய்யப்பட்டிருந்த மண்டையோடுகளையும் எச்சங்களையும் வெளியில் அகற்றி பெட்டிகளில் அடைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதுடன் அடுத்த கட்ட அகழ்வுப் பணிகள் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் பிரகாரம் தற்போது 19 ஆவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட பணிகளின்போது 5 மனித எலும்புக்கூடுகள் வெளியில் அகற்றப்பட்டு பாதுகாப்பாக பெட்டிகளில் அடைக்கப்பட்டதுடன் பெட்டிகளில் அடைக்கும் பணிகள் இன்று நிறைவடைந்த பின்னர் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகவும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அது மட்டுமல்லாது இதுவரை மொத்தமாக 28 எலும்புக்கூடுகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையின் பிரத்தியேக அறையொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த மனித புதைகுழியில் இதுவரை 53 மண்டையோடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment