அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளை தடுக்க புதிய சட்டம் உருவாக்க முயற்சிக்கின்றது இந்திய சட்ட ஆணையம்! இலங்கையும் செய்யுமா?
கிரிமினல் குற்றப்பின்னணி உடையவர்களை அரசியலிலிருந்து வெளியேற்றுவது, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பொய்யான தகவல்களை கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்வது குறித்து கருத்து தெரிவிக்கும்படி அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரை இந்திய சட்ட ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய சட்ட ஆணையம் சனிக்கிழமை ஆலோசனை நடாத்தியுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்ட யோசனைகள் அடிப்படையில் மேற்சொன்ன இரு விவகாரம் தொடர்பாக அறிக்கையை இறுதி செய்து உச்ச நீதிமன்றத்தில் இந்த மாதம் சட்ட ஆணையம் தாக்கல் செய்யும் என இந்திய பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
இவை தொடர்பாக கருத்து கேட்டு முடிவு எடுக்க பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய, மாநில கட்சிகளை சட்ட ஆணையம் அழைத்திருந்தது.
தற்போது நடைமுறையில் உள்ளபடி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட உடனேயே, மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்வதா, அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போதோ அல்லது குற்றச்சாட்டு பதிவு செய்யும் போதோ தகுதி நீக்கம் செய்வதா? மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 125ஏ வின் கீழ் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரத்தில் தவறான விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதை காரணமாக வைத்து தகுதி நீக்கம் செய்யலாமா என்பது குறித்து கருத்து தெரிவிக்கும்படி சட்ட ஆணையத்தை உச்ச நீதிமன்றம் டிசம்பரில் கேட்டிருந்தது.
தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் தெரிவித்திருந்தால் தகுதி நீக்கம் செய்யலாம் என்றால் அந்த நடவடிக்கை தொடர்பான வழிமுறைகள் என்ன என்று தெரிவிக்கும்படியும் அது கேட்டிருந்தது. சனிக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்ட ஆணைய தலைவர் நீதிபதி (ஓய்வு) அஜித் பிரகாஷ் ஷா கூறியுள்ளதாவது:
கிரிமினல் குற்ற பின்னணி உடையவர்கள் அரசியலில் பெருகிவருவது பற்றி இந்த ஆணையம் ஆராய்ந்து, சட்டங்கள் மூலமாக அதற்கு தீர்வு காண்பது எப்படி என்பதை பரிசீலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவருமான பி.பி.ஜீவன் ரெட்டி கூறுகையில், ‘எல்லா
கட்சிகளுமே கிரிமினல் குற்ற பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தேர்தலில் நிறுத்துகின்றன. மற்றவர்களைவிட கிரிமினல் பின்னணி உடைய வேட்பாளர்களின் வெற்றி விகிதம் அதிகமாக இருக்கிறது. இதனால்தான் குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்களை நிறுத்த கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன.
2004 லிருந்து 2013 வரையிலான காலத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 28.4 சதவீதம் பேர் 9993 வழக்குகளில் தொடர்புடையவர்கள். இவற்றில் 1287 வழக்குகள் கொலை, கற்பழிப்பு, ஊழல், பணம் பறிப்பு, கொள்ளை சம்பந்தப்பட்டவை என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான மனு தொடர்பாக விசாரணை நடத்தியபோது இந்த மேற்சொன்ன இரு பிரச்சினைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி சட்ட ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கற்பழிப்பு, கடத்தல், கொலை போன்ற கொடிய குற்றங்கள் சம்பந்தமாக நீதிமன்றத்தால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நபர்களை, தேர்தலில் போட்டியிட தடை செய்யலாம் என சட்ட இலாகாவின் அமைச்சரவை வரைவு குறிப்பு உத்தேசிக்கிறது.
குறைந்தது 7 ஆண்டு கால தண்டனைக்குரிய குற்றச்செயல்களுக்காக நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்த நபர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று சட்ட அமைச்சகம் உத்தேச கருத்தை முன் வைத்துள்ளது.
தேர்தல் ஆணையமோ 5 ஆண்டு அல்லது அதற்கு மேலான காலத்துக்கு சிறைத் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் போட்டியிட தடை விதிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் யோசனையை முன்வைத்தது.
ஜூலை 10 ம் தேதி வெளியிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், சிறையில் அடைக்கப்பட்ட நபர்கள் போட்டியிட தடை விதித்தும் குற்ற
வாளியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை உடனேயே தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதனிடையே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் மற்றொரு உத்தேச திருத்தத்தின்படி எந்த வேட்பாளராவது தேர்தல் பிரமா
ணப் பத்திரத்தில் உண்மைகளை மறைத்தாலோ அல்லது பொய் தகவல்களை கொடுத்தாலோ அதற்காக 3 ஆண்டு சிறைத் தண்டனை, மற்றும் 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வகை செய்கிறது.
மேற்படி விடயம் இந்தியாவில் நடைமுறைக்கு வருமா அல்லது சாதமான பதில் கிடைக்கு என்பதற்கு அப்பால் இலங்கையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுமா என்பது முக்கியமான விடயமாகும்.
குறிப்பாக இன்று தமி்ழ் மக்களி்ன் அரசியல் வட்டம் கிறிமினல்களால் நிரப்பப்பட்டுள்ளது. பெரும்பாலோனோர் முன்னாள் ஆயுதக்குழுக்களை சேர்ந்தவர்க்ள். இவர்கள் யாவரது கைகளும் இரத்தக்கறை படிந்தவை. இவர்கள் நிதிமன்றுகளால் குறறவாளிகள் என்று நிருபிக்கப்படாதவர்களாக இருந்தாலும் சமூகத்ததின் மனச்சாட்சியின் முன்னால் இவர்கள் குற்றவாளிகளே.
டக்ளஸ், சித்தார்த்தன், அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சந்திரன், கருணா , பிள்ளையான் என நீண்டு செல்லும் பெரும் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் தமது மனச்சாட்சியை கேட்டால் தங்களால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் இத்தனையா என ஆச்சரியப்படுவர்.
0 comments :
Post a Comment