Friday, February 28, 2014

மட்டக்களப்பு பாதர் டயஸ் 50 வயது தாண்டிய பெண்ணுடன் கொழும்பு விபச்சார விடுதியில் கைது! கண்டித்து மக்கள் துண்டு பிரசுரம்.

இயேசு கிறிஸ்த்து இவ்வுலகில் விட்டுச்சென்ற பணியினை உலகெங்கும் ஏன் இலங்கையிலும் கூட சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து மறைபணியாற்றி மறைந்த குருக்கள் துறவியர் ஆரம்பித்து விட்டுச்சென்ற மறைபரப்புப் பணியின் நிலை என்ன?

அவர்களின் அயராத உழைப்பினாலும், ஏழைகளுக்கு என்றென்றைக்கும் உதவும் என்ற மேலான எண்ணத்தினாலும் சேர்க்கப்பட்ட உடமைகளையும், சொத்துக்களையும் உண்டு குடித்து உல்லாசம் அனுபவிப்பவர்கள் இன்று எத்தனை பேர்?

அது மட்டுமல்லாது குருத்துவத்தின் சிறப்பினை சீரழிக்கும் நோக்குடனும், சிறப்பாக சேவைசெய்யும் குருக்களின் மரியாதையை குறைக்கும் படியாகவும் பெண்களுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதும், காமசேட்டைகள் செய்வதும் இப்போது கத்தோலிக்க குருமாரிடையே பெருகி வரும் மிக கேவலமான பழக்கங்களாகும்.

இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் பொதுமக்களால் வெளியிடப்பட்ட மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் பாதர் டயஸ் அவர்களின் காம விளையாட்டை அம்பலப்படுத்தும் துண்டுப்பிரசுரமாகும்.

இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடும் குருக்களை ஆயர் பாராமுகமாக இருப்பது ஏன்?

இதற்கு ஆயரும் உடந்தையா?

இல்லை எனில் இவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடபடிக்கை என்ன?

இவ்வாறான குருக்கள் இந்த மறைமாவட்டத்திற்கு தேவையா?

இவ்வாறான செயற்பாட்டிற்கு எதிராக ஐ.நா சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனம் ஒன்று வத்திக்கானை எச்சரித்துள்ளது. இந்நிலை மட்டக்களப்பு மறைமாவட்டத்திற்கும் வேண்டுமா?

பொது நிலையினரை பிரசங்கங்களின் ஊடாக ஏசுவதும், மறைமுகமாக மனம் நோகச்செய்வதும், கள்ளத் தந்ரோபாயங்களால் திருச்சபையின் வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களை வெட்டிவிடுவதும், ஆலயத்திற்கு வரும் இளைஞர்களை வைத்து மதுபானம் கொள்வனவு செய்வது போன்ற ஈனத்தனமான காரியங்களை விட்டுவிட்டு மறைபணியினை ஆற்றவேண்டும் என்பதே பொது நிலையினரின் விருப்பம்.

அவ்வாறு நடக்க இயலாதவர்கள் குருத்துவத்தை விட்டுவெளியேறுவது சிறந்தது என்பதும் பொது நிலையினரின் ஆதங்கமுமாகும்.

இனிமேல் பொதுநிலையினர் இதில் கவனமாக இருப்பார்கள், இருக்கவும் வேண்டும் என்பதற்கு இந்த மடல் ஆதாரமாகும்.3 comments :

Anonymous ,  March 2, 2014 at 1:40 PM  

பைபிளில் உள்ள மத்தேயு 12வது அதிகாரம்; வசனம் 33 பின்வருமாறு குறிப்பிடுகிறது:
“நீங்கள் நல்ல மரமாக இருந்தால் நல்ல கனியைக் கொடுப்பீர்கள்; கெட்ட மரமாக இருந்தால் கெட்ட கனியைக் கொடுப்பீர்கள்; ஒரு மரம் அதன் கனிகளாலேயே அறியப்படும்."
மேலே கூறப்பட்ட பாதிரிமார்களால் உண்மையாகவே வேதாகமத்தை அச்சுப் பிசகாமல் பின்பற்றி வரும் உண்மைக் கிறிஸ்தவர்களுக்குக் களங்கம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல கடவுளுடைய நாமமும் கூட பழித்துப் பேசப்படுகிறது.

Anonymous ,  March 2, 2014 at 1:40 PM  

பைபிளில் உள்ள மத்தேயு 12வது அதிகாரம்; வசனம் 33 பின்வருமாறு குறிப்பிடுகிறது:
“நீங்கள் நல்ல மரமாக இருந்தால் நல்ல கனியைக் கொடுப்பீர்கள்; கெட்ட மரமாக இருந்தால் கெட்ட கனியைக் கொடுப்பீர்கள்; ஒரு மரம் அதன் கனிகளாலேயே அறியப்படும்."

மேலே கூறப்பட்ட பாதிரிமார்களால் உண்மையாகவே வேதாகமத்தை அச்சுப் பிசகாமல் பின்பற்றி வரும் உண்மைக் கிறிஸ்தவர்களுக்குக் களங்கம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல கடவுளுடைய நாமமும் கூட பழித்துப் பேசப்படுகிறது.

Anonymous ,  March 4, 2014 at 4:17 AM  

ivarai neekkngal

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com