Saturday, February 1, 2014

பராசூட் விரியாமையால் 10ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த 26 வயதுடைய பெண் பலி ( வீடியோ ) !!

பெங்களூர், சேலம் அருகே விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து பயிற்சியில் ஈடுபட்ட பெண் ஒருவர் பலி யானார். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தர் 26 வயது டைய ரம்யா என்ற பெண்ணே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதா வது,

சேலம் மாவட்டம் ஓமலூர், காமலாபுரத்தில் விமான நிலை யம் ஒன்று உள்ளது. இங்கிருந்து சென்னைக்கு விமானம் சேவை இடம் பெற் றுள்ளது. போதிய பயணிகள் வராதமையால் விமான சேவையில் பாரிய நஷ்டம் ஏற்பட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, குறித்த விமான நிலையத்தில் அதிகாரி ஒருவரின் அனுமதியுடன் டெல்லியை சேர்ந்த இந்தியா ஸ்கை டைவிங் பாராசூட் அமைப்பின் சார்பில், சிறிய வகை விமானத்தில் இருந்து பாராசூட் கட்டிக் கொண்டு குதிக்கும் பயிற்சி (ஸ்கை டைவிங்) கடந்த 24ஆம் திகதி ஆரம்பமானது.

இப் பயிற்சியில் பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொரியியலாளர் வினோத் (வயது28), அவரது மனைவி ரம்யா (26) உள்ளிட்ட 11 பேர் பயிற்சி பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் வினோத்தும், ரம்யாவும் பயிற்சிக்கு சென்றனர். ரம்யாவுடன் பயிற்சியாளர்கள் மோகன்ராவ், ஆஷ் ஆகியோர் விமான த்தில் சென்றனர். சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்த போது, பராசூட் கட்டிக் கொண்டு ரம்யா குதித்தார். அப்போது, பராசூட் விரியாததால், பொட்டையாபுரம் என்னுமிடத்தில் காட்டுப் பகுதியில் அவர் கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தால், உடனடியாக பயிற்சி நிறுத்த ப்பட்டது.

பயிற்சியின் போது ரம்யாவுடன் சென்ற அவரது கணவர் வினோத் கூறுகையில், நானும், எனது மனைவியும் பயிற்சிக்கு சென்றோம். விமானம் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தை எட்டியதும், முதலில் எனது மனைவியை குதிக்கும்படி பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரம்யா விமானத்தில் இருந்து குதித்தார். அப்படி குதிக்கும் போது, சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் பராசூட் முழுமையாக விரிய வேண்டும். ஆனால், அந்த பாராசூட் விரியவில்லை.

ரம்யா, பராசூட்டை விரிவடைய செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் காற்று பலமாக வீசியதால், பாராசூட் விரிவடைவதற்கு பதிலாக அவரது உடலை சுற்றிக் கொண்டது. இதனால் அவர் கீழே விழுந்து இறந்து விட்டார். பயிற்சியின் போது விபத்து நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்க வயர்லெஸ் கருவி கொடுக்கப்பட்டுள்ளது. தன்னிடம் இருந்த வயர்லெஸ் மூலம் பயிற்சி யாளர்களுடன் ரம்யா தொடர்பு கொண்டார்.

ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. விபத்து நடந்த போது அந்த இடத்தில் பயிற்சியாளர்களோ, பயிற்சி நிறுவனத்தை சேர்ந்தவர்களோ இல்லை என்றார். இந்த விபத்து தொடர்பாக இந்தியன் ஸ்கை டைவிங் அமைப்பின் சேர்ந்த பயிற்சி நடத்துனர்கள் மதுரை திருநகர் நாகேஷ் (42), புதுடெல்லி கிருஷ்ணா நகர் அங்கீதா (28), பயிற்சியாளர்கள் விசாகப்பட்டணம் மோகன் ராவ் (38), ராஜஸ்தான் ஐஸ்வர்ய யாதவ் (33) ஆகிய 4 பேரை ஓமலூர் பொலிசார் கைது செய்துள்ளனர்.







2 comments :

சேது ,  February 1, 2014 at 4:57 PM  

படத்தை பார்த்தால் இசைப்பிரியாவின் தங்கை மாதிரி் தெரியுது. இலங்கை இராணுவம் தனது நவீன தொழில்நுட்பத்தால் தாக்கியிருக்குமோ?

Arya ,  February 10, 2014 at 11:06 AM  

It can happend only in toilet india only.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com