Tuesday, January 21, 2014

ஆணைக்குழுவின் முதல்கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவு! தேவையான ஆலோசனைகளை வழங்கும் அதிகாரம் எமக்குண்டு-LLRC

பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் வடக்கில் காணாமல்போனோர் தொடர்பான தகவல்களை கண்டறிய இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டது. காணாமல்போனோர் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளை ஆராயும் பணிகள் கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு இன்று நிறைவடைந்தது.

காணமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை சமர் ப்பிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு தமது முறைப்பாடுகளை சமர்ப்பிப் பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டத்தில் விசா ரணைகள் இடம்பெறும் விதம் தொடர்பாக இன்று மாலை இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் காணமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவர் கருத்து தெரிவித்தார்.

காணமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரிவிக்கையில் சுமார் 152 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஏற்கனவே முறைப் பாடுகள் செய்தவர்களை தவிர புதிதாகமுறைப்பாடு செய்வதற்கும் பலர் வருகை தந்திருந்தனர். அந்த முறைப்பாடுகளையும் நாம் விசாரித்தோம்.

மேலும் புதிதாக முறைப்பாடுகளை செய்தவர்களுக்கு பிறிதொரு தினத்தை ஒதுக்கு வதாக நாம் தெரிவித்தோம். நாம் அவர்களுக்கு பதிவு தபாலில் அறிவிக்கவுள் ளோம். இதனை விசாரிப்பதற்கு அதிகாரம் இருந்தபோதிலும் தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை வழற்க எம்மால் முடியாது எமது அறிக்கையின் ஊடாக ஜனாதிபதியிடம் பரிந்துரைகளை சமர்ப்பிக்க முடியும். தேவையான ஆலோசனைகளை வழங்கும் அதிகாரம் எமக்குண்டு. தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை.

கற்றப்பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டது. காணாமல் போனோரின் உறவினர்கள் மன உளச்சலுக்குட்பட்டிருப்பதை ஜனாதிபதி தெளிவாக புரிந்து கொண்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com