Saturday, January 25, 2014

மன்னார் மனித புதைகுழி விவகாரம் CID யிடம் ஒப்படைப்பு! முதற் கட்ட விசாரணைகளை CID யினர் ஆரம்பித்தனர்!

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து இது வரை 44 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த மனித புதைகுழி விவகாரம் குற்றப்புலனாய்வுப் பிரி விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதையடுத்து, CID அதிகாரிகள் குழு வொன்று நேற்று திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி பகுதிக்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை ஆரம் பித்தனர்.

முதற்கட்டமாக குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராம அலுவலகர் மற்றும் அநுரா தபுரம் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர். மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் 13ஆவது குறித்த மனித புதைகுழி தோண்டும் பணிகள் இடம் பெற்றது.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் அடையாளப்படுத்தப்பட்ட சில மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு இது வரை 10 பெட்டிகளில் அடைக்கப்பட்டு ள்ளன. இந்த நிலையில் பெட்டிகளில் அடைக்கப்படும் மனித எலும்புக்கூடுகளை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவானின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் வைத்தியசாலையில் ஒரு இடத்தில் பெட்டிகளில் அடைக்கப்படும் மனித எலும்புக்கூடுகளை வைப்பதற்கான இடத்தை அடையாளப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com