Friday, January 10, 2014

ஒரு கோடி ரூபா கொந்தராத்து கொடுத்து தனது தந்தையை கொலை செய்த மகன் கைது!!!

ஒரு கோடி ரூபா கொந்தராத்து கொடுத்து தனது தந்தையை கொலை செய்த மகனை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளதுடன், நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பிரதேசத் தில் கோல்டன் எவன்வத்தை காணியின் உரிமையாளரான எதிரிசிங்க ஆராச்சிகே நவரத்ன (72 வயது) என்பவரின் மரணம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவரின் இளைய மகனான எதிரிசிங்க ஆராச்சிகே ஜிஹான் லங்கா நவரத்ன, கொலை செய்வதற்கான கொந்தராத்தை பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜிந்தொட்ட மானவடுகே அனுரபிரியங்கர, மிஹிந்து குலசூரிய ஜோசப் கெலிஸ்டர் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டனர்.

சும்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்டவர் பல ஏக்கர் காணிகளின் உரிமையாளரும் கோடீஸ்வரருமாவார். அவருக்கு இரணடு பிள்ளை கள் உள்ளனர். தனது மகன்மாருக்கு அவர் தனது காணிகளின் பெரும்பகுதியை வழங்கியுள்ளார். இளைய மகன் தனக்கு வழங்கப்பட்ட காணிகளை விற்று பண த்தை வீண்விரயம் செய்துள்ளார். பின்னர் எஞ்சியுள்ள காணியை தந்தையிடம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

எஞ்சியுள்ள காணியை விற்று வயோதிபர் இல்லமொன்றுக்கு வழங்க வேண்டும் என்பது கொலை செய்யப்பட்ட தந்தையின் திட்டமாக இருந்துள்ளது.

இந்நிலையில், இளைய மகன் தனது தந்தையை கொலை செய்ய கைது செய்யப் பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவருக்கும் 100 இலட்சம் ரூபாவுக்கு கொந்தராத்தினை கொடுத்துள்ளார். இதன்படி கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி தந்தை வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்து இன்று நீதிமன்னறில் ஆஜர் செய்த போதே நீர்கொழும்பு மேலதிக நீதவான் டி.எம்.டி. பண்டார சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com