Sunday, January 12, 2014

வாகனங்களில் VIP, VVIP ஸ்ரிக்கர் ஒட்டுவதற்கு தடைவரக் காரணம் ராதிகாசிற்சபேசன்?

இலங்கையில் முக்கியமான நபர்கள், வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் தூதுவர்கள், முக்கியஸ்தர்கள் ஆகியோர் பயணம் செய்யும் வாகனங்களுக்கு இதுவரை காலமும் VIP, VVIP ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டன. இவ்வாறு ஒட்டப்பட்ட வாகனங்கள் பொலிசாரின் சோதனைகள் மற்றும் போக்குவரத்து பொலிசாரின் சோதனைகள் இன்றி இலகுவாக பயனங்களை மேற்கொண்டன.

இந் நிலையில் அண்மையில் இலங்கை வந்த கனேடிய பாராளுமன்ற உறுப்பினரான யாழ் மாவட்டத்தை சொந்த இடமாக கொண்ட ராதிகா சிற்சபேசன் கொண்டம் சிறிதரனுடன் பயணிக்கும் போதும் சுற்றுலா விசாவில் வந்து அனைத்து இடங்களையும் பார்வையிட்ட போதும் பயன்படுத்திய வாகனமானது VIP, VVIP வாகனமாகும். ராதிகா சிற்சபேசன் பயணித்த வாகனத்தில் VVIP எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததால் பொலிசார் அவ் வாகனத்தை இடைமறிக்கவும் இல்லை. எந்தவொரு இடத்திலும் சோதனைக்குட்படுத்தவும் இல்லை. இதன் காரணமாக சுற்றுலா விசாவில் வந்த ராதிகா சிற்சபேசன் கொண்ட் சிறிதரனுடன் இணைந்து தமது விசா விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்றுள்ளார்.

பொலிசாரை திசை திருப்பும் வகையில் இந்த ஸ்டிக்கர்கள் இருந்துள்ளது. பொலிசாரும் அவ் ஸ்டிக்கர் ராதிகா சிற்சபேசனின் வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்தமையினாலேயே சில நடவடிக்கைகளை தம்மால் அவதானித்து உறுதிப்படுத்த முடியவில்லை என அரசாங்குத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான சிக்கல்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கிலேயே வாகனங்களில் VIP, VVIP ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒட்டும் பட்சத்தில் குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com