அமெரிக்கா உலக சமாதானத்திற்கு பாரிய அச்சுறுத்தல் விடுக்கின்றது - ஆய்வில் தகவல்!
2013 ஆம் ஆண்டு இறுதியில் உலக சுதந்திர வலைய மைப்பும் கோல்அப் நிறுவனமும் இணைந்து உலகின் சமாதானத்தை அச்சுறுத்தும் நாடுகள் தொடர்பிலான ஆய்வை நடத்தியியது இந்த ஆய்வில் உலகின் சமா தானத்தை அச்சுறுத்தும் நாடாக அமெரிக்காவே உள்ளது என அமெரிக்காவின் நட்பு நாடுகளான துருக்கி, கிரீஸ் உள்ளிட்ட 68 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடு ப்பு ஆய்வு ஒன்றின் மூலம் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.
இதன்போது உலக பொலிஸ்காரனாக அமெரிக்கா நடந்து கொள்வதாக பல நாடுகளினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வின் போது உலக சமாதானத்திற்கு பாரிய அச்சுறுத்தல் விடுக்கும் நாடு எது? என 60 நாடுகளில் உள்ளவர்களிடம் வினவப்பட்டது. 24 வீதத்தினர் அமெரிக்காவே உலக சமாதானத்துக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் உலக சமாதானத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இரண்டாவது நாடாக 8 வீத வாக்குகளால் பாகிஸ்தான் பதிவு பெற்றுள்ளது. அதேபோல் சீனா 6 வீத வாக்குகளுடன் உலக சமாதான அச்சுறுத்தலுக்கான மூன்றாவது நாடாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான், ஈரான், இஸ்ரேல், வடகொரியா என்பன உலக சமாதான அச்சுறுத்தல் நாடுகளாக காட்டப்பட்டுள்ளன. இதேவேளை, மத்திய கிழக்கு மற்றும் வடஆபிரிக்க நாடுகளிலேயே அமெரிக்கா அச்சுறுத்தல் நாடாக இருப்பதாக பெருமளவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளும் அமெரிக்காவை பயங்கரமான நாடாக சுட்டிக்காட்டியுள்ளன. இறுதியாக அமெரிக்காவின் 70 வீதமான மக்கள், தமது நாடு, 2014ம் ஆண்டில் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தகுதியை கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாக அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்படட்டுள்ளது.
அமெரிக்காவானது மத்திய கிழக்கு நாடுகள் உட்பட இலங்கை போன்ற சிறிய நாடுகளின் உள்விவகாரங்களிலும் தாம் உலக பொலிஸ்காரன் போல் தலையிட்டு வருகின்றது. அத்துடன் அண்மையில் சிரியா, பொதுமக்கள் மீது இரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் சிரிய விவகாரத்தில் தலையிட்டு சிரியாவை அடக்கி கட்டுப்படுத்துமுகமாக கட்டளை பிறப்பித்தமையும் அமெரிக்காவின் நம்பகத்தன்மையின் இப் பாரிய வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
அமெரிக்காவின் இச் செயற்பாட்டை அமெரிக்க மக்கள் உட்பட சர்வதேச சமூகமும் எதிர்த்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment