Tuesday, January 7, 2014

உடல் மற்றும் உள வளம் கொண்ட பரம்பரையினரை உருவாக்க பாடசாலைகளில் பயிற்சி!

நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இன்று(06.01.2013) முதல் தேக அப்பியாச வேலைத்டிதிட்டம் ஆரம்பிக்கப்படுவதாகவும் இதற்கிணங்க பாடசாலை நாட் களில் தினந்தோறும் காலை 10 நிமிடங்கள் இந்த தேக அப்பியாச நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் இந்த வேலைத் திட்டத்தில் அனைத்து மாணவர்களதும் பங்க ளிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த புதிய தேக அப்பியாச பயிற்சி தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பாடசாலை களினதும் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக இந்த வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இப்பாகமுவ மத்திய மகாவித் தியாலயத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் முன்னெடுக்கப்படும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் பாடசாலை மாணவர்கள் ஏதாவதொரு விளையாட்டில் பங்கேற்கவேண் டியது அவசியம் என அமைச்சரவையினால் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இலவச கல்வி பெறும் ஒவ்வொரு மாணவரும் காலையில் உடற்பயிற்சி பெறவேண்டியது அவசிய மெனவும் கல்வி அமைச்சர் வலியுறுத்தினார்.

ஆரோக்கியமான உடல் மற்றும் உள வளம் கொண்ட பரம்பரையினரை உருவாக் குவதே மஹிந்த சிந்தனையின் நோக்கம் என்பதன் காரணமாகவே பாடசாலை மாணவர்களுக்கு தேக அப்பியாசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதென தெரிவித்த அமைச்சர் இந்த வேலை திட்டத்திற்கு அவசியமான வீடியோ இறுவெட்டுகள், இசை நாதம், ஆசிரியர் கையேடு ஆகியன தற்போது அனைத்து பாடசாலை களுக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பதுடன் ஆசிரியர்களுக்கும் இது தொடர்பிலான பயிற்சிகள் , வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com