Tuesday, January 14, 2014

காதல் சின்னம் தாஜ்மஹால் பலவீனமடைகிறதா?

உலகப் புகழ்பெற்ற, காதல் சின்னங்களில் ஒன்றான தாஜ் மகாலின் முக்கிய நுழைவாயிலான, ராயல் பேட்டை, ஸாஜ ஹான் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்ற தாஜ் மகாலின் பிரதான நுழைவாயிலின் மேற்கூரை, பலவீன மடைந்துள்ளதால் இதைச் சீரமைக்கும் பணி, கடந்த 2003இல் நடந்தது.

அக்காலப்பகுதியில் கட்டடத்தின் தென் பகுதி நுழைவாயில் சுவரில் காணப்பட்ட நீர்க்கசிவால் சில கற்கள் பெயர்ந்து விழுந்த நிலையில் மீண்டும் இந்த நுழை வாயிலின் வடக்குப் பகுதியில் உள்ள சிவப்பு கற்களின் மேற்பூச்சு தற்போது பெயர்ந்து விழத் ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து இந்த நுழைவாயிலை ஆய்வு செய்த தொல்லியல் துறை ஆய்வா ளர்கள் நுழைவாயிலின் மேற்கூரை வரை நீர்க்கசிவு இருப்பதைக் கண்டுபிடித் துள்ளதுடன் புனரமைப்புப் பணியையும் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com