Tuesday, January 28, 2014

வேறுபாட்டை களைந்து ஒற்றுமையாக ஒன்று பட்டால் வெற்றி நிச்சையம்- யாழில். வாசுதேவ நாணயக்கார(படங்கள் இணைப்பு)


2013 ஆண்டு இறுதிக்காலப்பகுதியில் அரச கரும ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வடமாகாணத்தில் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விவாதப்போட்டி தொடரில் வெற்றி பெற்ற மாணவர்கட்கான சான்றிதழ் மற்றும் வெற்றிக் கேடையம் வழங்கும் நிகழ்வு இன்று(28.01.2014) காலை 1.45 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

இன் நிகழ்வுக்கு தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது இலங்கையை பொறுத்தவரை வேறுபாடுகள் என்பது பலகாலம் காலமாக காணப்படுகிறது எனினும் இந்த வேறுபாட்டை களைந்து ஒன்று பட்டு செயல்பட வேண்டியதுதான் ஜனநாயகத்திற்கு அவசியமானது.

நம்மவர்களிடத்தில் உள்ள ஒரு பாரதூரமான பிரச்சனை ஒற்றுமையின்மையே அதே போல தான் வரலாற்று ரீதியில் ஒட்டு மொத்த முழு இலங்கையின் ஒற்றுமைக்கு ஜனாதிபதியும் மறுபுறம் வடமாகாணத்தின் ஒற்றுமைக்கு முதலமைச்சரும் என பாடுபடுகின்றனர்

இதைத்தான் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா ஒற்றுமையை வலுச்சேர்ப்பதற்கு பாடுபட்டது போன்று நாமும் மொழி, இனம், மதம் என பாகுபாட்டை மறந்து எமது நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபடவேண்டும் எனக்குறிப்பிட்டார்.

மேலும் மாகாண அரசும் ,மத்திய அரசும் ஒன்றுபட்டு செயற்படுமாயின் அதுவே ஒற்றுமையின் அடித்தளமாக விளங்கும் என தெரிவித்ததுடன் வடமாகாணத்தில் தமிழ் மொழியும், தென்மாகாணத்தில் சிங்கள மொழியும் நாடுபூராகவும் தமிழ் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளுமே அதிகம் பேசப்படுகிறது எனவே தான் இதய பூர்வமாக நம் ஒவ்வொருவரிடையே சமத்தவம் நிலவ வேண்டுமாயின் மொழி என்ற பிரிவினையை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் நாடு சுவீட்சமடையும் என்பதில் எந்த ஜயப்பாடும் இல்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து நிகழ்வில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களின் இணைப்பிலான விவாத அரங்கு ஒன்றும் மொழிப்பிரச்சினையால் இலங்கை துண்டாடப்பட்டு கிடப்பதை விபரிக்கும் நாடகமும் நடைபெற்றது.


இந்நிகழ்வில் வடமாகாண பாடசாலை மட்ட விவாதப்போட்டியில் தெரிவாகி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு வெற்றிக் கேடையங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு அரசமொழி ஆணைக்குழுவின் செயலாளர் ஜயசிங்க யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பாலசுந்தரம் பிள்ளை வடமாகாணத்தை பிரதிநிதுத்துவப்படுத்தும் பாடசாலை சிலவற்றின் அதிபர், ஆசிரியர், மாணவர்கள், பார்வையாளர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com