இந்திய இராசதந்திரி திவ்யானியின் நிர்வாணம் இலங்கைக்கு நன்மையளிக்குமா?
அமெரிக்காவில் இந்திய இராசதந்திரி திவ்யானி கோப்ரகடே நிர்வாணமாக்கப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள இந்திய – அமெரிக்க இராசதந்திர பிரச்சினையினால் அமெரிக்க உதவிச் செயலாளர் நிஷா தேசாய் தனது, இலங்கை வருகையை பிற்போட்டுள்ளார்.
அவர் இம்மாதம் இரண்டாம் வாரம் இந்திய சுற்றுலாவை மேற்கொண்டுவிட்டு, இலங்கைக்கு வருகை தரவிருந்தார். தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவுக்கு வருகைதர முடியாதுள்ளதால், அவரது இலங்கைக்கான சுற்றுலாவும் இம்மாத இறுதிவரை பிற்போடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டுக் கூட்டத் தொடருக்கு முன்னர் அவர் இலங்கைக்கு வரவுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment