Monday, January 6, 2014

வி.ஐ.பீ, வி.வி.ஐ.பீ. ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டுவது முற்றாக தடை!

வி.ஐ.பீ, வி.வி.ஐ.பீ. ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஒட்டப்பட் டுள்ள சகல ஸ்டிக்கர்களையும் இன்று முதல் அகற்றுமாறு மோட்டார் போக்குவரத்து பிரதி பொலிஸ்மா அதிபர் நாட் டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்து ள்ளார்.

நிறக்கண்ணாடிகள் பொருத்தப்பட்டன வாகனங்களும் இன்று முதல் செலுத்த முடியாது. இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண கருத்து தெரிவித்தார்.

போதை பொருட்களை கடத்துதல் மற்றும் கசிப்பு கொண்டு செல்லல் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட முறைகேடான செயற்பாடுகளுக்கு போலி அடிப்படையில் இந்த ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வாகனங்களில் ஒட்டி பயணிக்க கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இது வாகன போக்குவரத்திற்கு முற்றுமுழுதாக சட்டவிரோதமான செயற்பாடாகும்.

எக்காரணம் கொண்டும் வி.ஐ.பீ, வி.வி.ஐ.பீ ஸ்டிக்கர்களை ஒட்டி வாகனங்களில் பயணிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வாகனத்தின் "வின்ஸ் க்ரீன்" பகுதி முழுமையாக கறுப்பு நிறத்தினால் மறைத்து வைக்கப்பட கூடாது. ஒளி வாகனத்திற்குள் தெரியக்ககூடியவாறு சாரதியினை இனங்காண கூடியவாறு வாகனங்கள் இருக்க வேண்டும்.

இவ்வாறு இல்லாத சந்தர்ப்பங்களில் பல்வேறுப்பட்ட மேசாடிகள் இடம்பெறு கின்றன. இவ்விரு சட்டங்களைநாம் தீவிரமாக அமுல்படுத்த தீர்மானித்துள்ளோம். இது தொடர்பில் நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிற்கும் அறிவித்து ள்ளோம். இவற்றை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள வுள்ளோம் என தெரிவித்தார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com