Friday, January 10, 2014

இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் சமூக வலைத்தளத்தில் வெளியான கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும்!

இலங்கை இராணுவம் ஷெல் தாக்குதல்களை மேற் கொண்டு நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்ததாக அமெரிக்காவின் சமூக வலைத்தளத்தில் வெளியான கருத்து தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திடம் விளக்கம் கோரப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.

வட பகுதிக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க திணைக்கள யுத்தக்குற்ற விசாரணை பிரிவு பொறுப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசெல் சிசேன் ஆகியோர் யுத்தம் இடம்பெற்ற இடங்களை பார்வையிட்டுள்ளனர்.

புனித அந்தோனி மைதானத்திற்கு அவர்கள் விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தரவேற்றிய கொழும்பு அமெரிக்க தூதரகம், இலங்கை இராணுவம் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் நூறு குடும்பங்கள் கொல்லப்பட்ட இடம்தான் இது என்று விளக்கம் அளித்திருந்தது. அமெரிக்க தூதரகத்தின் இத்தகவலை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com