யாழ். மன்னார் ஆயர்களை உடன் கைது செய்ய பொலிஸ் மா அதிபரிடம் இராவணா பலய அமைப்பு கோரிக்கை!
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்தினால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க முக்கியஸ்தர்களிடம் பொய்யான தகவல்களை வழங்கிய யாழ் மற்றும் மன்னார் ஆயர்களை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் இராவணா பலய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ரெப்பிடமே மேற்படி இரு ஆயர்களும் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளனர் என்று இந்த அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
'இலங்கைக்கு எதிராக போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டீபர் ரெப் வெளியிட்ட கருத்தை நாம் மிகவும் கடுமையாகக் கண்டிக்கின்றோம்' என்று குறிப்பிட்டுள்ள இராவணா பலய, 'மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் வழங்கிய பொய்யான தகவல்களின் அடிப்படையிலேயே ஸ்டீபன் ரெப் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்' என்றும் 'எனவே, மேற்படி ஆயர்கள் இருவரையும் கைது செய்ய பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தகந்தே சத்தாதிஸ்த தேரர் தெரிவித்துள்ளார்.
1 comments :
அன்னியருக்கு நாட்டை காட்டிக்கொடுத்த தேச துரோக குற்றத்திற்காக வழக்கு பதிய வேண்டியதுதானே.
Post a Comment