ஆண் குழந்தையை பிரசவித்தார் கன்னியாஸ்திரி!
இத்தாலியின் சல்வடோரைச் சேர்ந்த 31 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த புதன்கிழமை 3.5 கிலோ எடையுள்ள ஆண் குழந்தையொன்றை ரெய்ட்டி நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் பிரசவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது குழந்தையும் தாயும் நலமாக உள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த கன்னியாஸ்திரி தான் கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை எனவும் வயிற்றுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை விட தற்போது பிறந்துள்ள தனது குழந்தைக்கு இத்தாலியில் மிகப் பிரபலமான பெயர்களில் ஒன்றான புனித பிரான்சிஸ் அடிகளாரின் நினைவாக அவரது பெயரான பிரான்சிஸ் என்ற பெயரை குழந்தைகளுக்கு சூட்டியதாக தெரிவித்துள்ளார்.
இதே வேளை மேற்படி கன்னியாஸ்திரி, இத்தாலியின் ரெய்ட்டி நகரில் வயோதிபர் இல்லமொன்றை பராமரித்துவரும் கன்னியாஸ்திரிகள் சபையொன்றை சேர்ந்தவராவாராவார் என்பதுடன் அவர் குழந்தையொன்றை பிரசவித்தமை குறித்து தாம் பெரும் வியப்படைந்துள்ளதாக அவரின் சக கன்னியாஸ்திரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment