குடிபோதையில் ஹிந்தி நடிகை பூனம் பாண்டேயை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இரசிகர்கள்!
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடனமாடிய ஹிந்தி நடிகை பூனம் பாண்டேயை இரசிகர்கள் குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தகவல் வெளி யாகியுள்ளது. பெங்களூர் இரவு விடுதியொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் பூனம்பாண்டே அதிர்ச் சியில் இருக்கின்றார்.
பணத்திற்காக போதை ஆசாமிகள் முன்பு நடனமாடவே ண்டாம் என்றும் அவர் நடிகைகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். புத்தாண்டை யொட்டி பெங்களூர் 'கிளப்´ ஒன்றில் என்னை நடனமாட அழைத்து இருந்தனர். இதற்காக நிறைய பணம் கொடுத்தார்கள். அங்கு ஏராளமான ஆண்கள் குடிபோதை யில் என்னை சுற்றி இருந்தார்கள். நான் மேடை ஏறி ஆட தொடங்கினேன். நிகழ்ச்சி முடியும் தருவாயில் இருந்தபோது சிலர் திடீரென மேடையை சுற்றி போடப்பட்டு இருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு மேடையை நோக்கி ஓடி வந்தார்கள்.
எல்லோருமே குடித்து இருந்தனர். என்னுடைய கையை பிடித்து இழுத்து அத்துமீறி நடந்தார்கள். என்னை பலாத்காரம் செய்யும் ஒரே நோக்கமே அவர்களிடம் இருந்தது. நான் அந்த முரட்டு இரசிகர்களின் பிடியில் இருந்து தப்பித்து ஓடினேன். ஆனாலும் விடாமல் துரத்தி வந்தனர். நான் தங்கி இருந்த அறைக்கும் துரத்தி வந்தனர்.கிளப் நிர்வாகத்தினர் பாதுகாப்புக்கு நிறுத்தி இருந்த ஆட்கள் போதுமா னதாக இல்லை. அவர்களால் குடிகாரர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஒரு வழியாக அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டேன். நான் மற்ற நடிகைகளிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் பணத்துக்காக யாரும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனம் ஆட போகாதீர்கள் என்று கடைசியில் அறிவுரை வேறு செய்துள்ளார் பூனம் பாண்டே. முன்னதாக நடிகை நித்தியா மேனனை இவ்வாறு புத்தாண்டில் நடனமாட அழைத்ததற்கு நான் பணத்துக்காக அவ்வாறு நடனமாடத் தயாராக இல்லை என காட்டமாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment