Friday, January 31, 2014

நிந்தவூர் பிரதேச சபையின் கவனத்திற்கு...!

நாம் இவ்வுலகில் நிரந்தரமில்லா வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் அனைவருக்கும் மரணம் என்பது நிச்சயிக்கபட்ட ஒரு விதியாகும் அந்தவகையில் நாம் மரணித்தபின்பு நம்மை அடக்கம் செய்வதற்கு ஒவ்வொருவருக்கும் நமது பிரதேச மையவாடிகளில் ஒரு இடம் நிச்சயம் கிடைக்குமென்பது நாம் நன்கு அறிந்த விடயம்

அந்தவகையில் நமது நிந்தவூரில் சில மையவாடிகள் நம்மால் கவனிப்பாரற்று பாதுகாக்கப்படாமல் அதை சுற்றிவர மதில்கள் அற்றநிலையில் கிடப்பதை நம்மால் காணக்கூடியதாயுள்ளது.

இதில் நம்மால் காணமுடிந்த ஒரு மையவாடியின் நிலையை இவ்விடத்தில மக்கள் பார்வைக்கு எடுத்துகொள்ள விரும்புகின்றேன்.

நிந்தவூர் 6 ம் பிரிவுக்குட்பட்ட பிரதேசம் “அல்-“பத்துறியா’’பாடசாலைக்கு முன்பாக அமைந்திருக்கும் மையவாடியின் நிலை மிகவும் மோசமான நிலையில் கிடப்பதை அப்பிரதேச மக்கள் மனம் நொந்து தெரிவித்துள்ளனர்.

இதை நேரில் சென்று அவதானித்தபோது அவ் மையாவாடியை சுற்றிவர இருபக்கங்கள் மாத்திரம் குறிகிய உயர மதில்கள் கட்டப்பட்ட நிலையில் நீண்ட காலமாக கிடப்பதும் மீதி உள்ள பக்கங்கள் மதில்கள் அற்ற நிலையில் நாய்கள் உட்சென்று கபூர்கள்’ தோன்றப்பட்ட நிலையில் கிடப்பதை அவதானிக்க முடிந்தது.

இதை கருத்தில் கொண்டு மக்களாகிய நாம் இவ் மையவாடியை புணரமைப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சுற்றிவர ஒழுங்கான முறையில் மதில்கள் அமைப்பதற்க்கு நமது பங்களிப்பினையும் ஒத்துழைப்பினையும் வழங்க முன்வரவேண்டும்.

இது சமந்தமாக பிரதேச சபை மற்றும் அரசியல் சார்புகள் உங்கள் கவனத்திலும் எடுத்துகொண்டு உங்களால் முடிந்தவரை இவ் மையவாடியை புணரமைப்பதற்கும் உங்கள் பங்களிப்பினை தந்தருளுமாறு மக்கள் சார்பாக நான் கேட்டுகொள்கின்றேன்.

(முஹம்மட்ஜெலீல் - நிந்தவூர்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com