Monday, January 20, 2014

மர்மமான முறையில் மீட்கப்பட்ட படகு இலங்கைக்கு சொந்தமானதா? பல்வேறு கோணங்களில் விசாரணை ஆரம்பம்!

இந்திய இராமநாதபுரமம் எல்லையில் மர்மமான முறை யில் மீட்கப்பட்ட படகு இலங்கைக்கு சொந்தமானதா என பல்வேறு கோணங்களில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள் ளது. இந்திய இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து 21 கடல் மைல் தொலைவில் மர்மமான முறை யில் பிளாஸ்டிக் படகு ஒன்று மிதந்து வந்துள்ளது. மண் டபம் கடலோர காவல்படையினர் ரோந்து சென்றபோது மர்ம படகை பார்த்து மண்டபம் கடலோர காவல்படை அலுவலகத்திற்கு கொண்டு வர முயற்சித்தனர்.

வரும் வழியில் படகு ஆற்றுவாயில் பகுதியில் கடல் நீர் மட்டம் குறைவாக இருந்ததால் பாறையில் சிக்கிக்கொண்டது. இதனால் படகை அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டனர். இதையடுத்து, மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படை, கடற்படை அதிகாரிகள் படகை மீட்கும் முயற்சியில் மீண்டும் நேற்று காலை ஈடுபட்டனர். மாலையில்தான் படகை மீட்க முடிந்தது.

மீட்கப்பட்ட படகு துறைமுகத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட் டுள்ளது. படகு தலைகீழாக கவிழ்ந்திருப்பதால் கரைக்கு கொண்டு வர முடியவில்லை. படகில் சிங்கள எழுத்து எழுதப்பட்டிருப்பதால் இலங்கைக்குச் சொந்தமான படகு என அதிகாரிகள் தெரிவித்தனர். மீனவர்கள் உதவியுடன் படகை தமிழக கடலோர காவல்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் மண்டபம் வடக்கு கரைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இலங்கைக்குச் சொந்தமான படகு இந்திய கடல்பகுதிக்கு வர காரணம் என்ன, படகில் வந்தவர்கள் யார், படகு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா என பல்வேறு கோணங்களில் கடலோர காவல்படையினர் விசாரிக்கின்றனர்.

மீனவ திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக மீன்வள அமைச்சு தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடல் எல்லை தாண்டுதலை தடுப்பதற்காக இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட் டுள்ளது. இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் அது தொடர்பாக நிரந்தர தீர்வு ஒன்றும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்களும் இந்திய கடற்பரப்புக்குள் நுழைந்த இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் மீனவ சட்டம் இலங்கை பாராளுமன்றில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த திருத்த சட்டத்தின் மூலம் பிற நாட்டு கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவ படகின் உரிமையாளரிடமிருந்து 15 லட்சம் ரூபா தண்டப்பணம் வரையில் அறவிடவுள்ள துடன் இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என மீன் பிடி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட மீனவர்கள் கைதான காலத்திலிருந்து இரண்டு வருடங்கள் மீனவ நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இலங்கை மற்றும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ததன் பின்னர் இந்த திருத்தச் சட்டம் குறித்து ஆராயவுள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com