இந்தியாவின் வெளியுறவு கொள்ளை மிகவும் மோசமாகவுள்ளது!இந்தியா இலங்கையுடன் சிறந்த நட்புறவை பேணவேண்டும் - பா.ஜ.க
இந்திய அரசாங்கம் இலங்கை அரசுடன் சிறந்த நட்புறவை பேணிவர வேண்டுமென இந்திய பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை இந்தியாவுக்கு மிகவும் நெரு ங்கிய நட்பு நாடு என்பதால் இந்திய இலங்கை உறவுகளை சிறப்பாக பேணுவதற்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் பாடுபட வேண்டுமென இந்தியாவின் பிரதான எதிர்கட்சி யான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவின் வெளியுறவு கொள்ளை மிகவும் மோசமாக இருப்பதாகவும் இதனால் இலங்கை உட்பட பிராந்திய நாடுகள் இந்தியாவிடமிருந்து அந்நியப்பட்டு வருவதாகவும் ராஜ்நாத் சிங் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment