டக்ளஸ் மற்றும் சந்திரிக்காவை கொலை செய்ய முயற்சித்தவர்களுக்கு விக்னேஸ்வரன் பரிசு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை படு கொலை செய்ய முயற்சித்தவர்களுக்கு வட மாகாண முத லமைச்சர் விக்னேஸ்வரன் தைப்பொங்கல் பரிசில் களை வழங்கியதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது.
அமைச்சர் டக்ளஸை கொலை செய்ய முயற்சித்த சத்தியலீலா மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை கொலை செய்ய முயற்சித்த ரகுபதி சர்மா ஆகியோருக்கு மட்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சேலைகளை வழங்கியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் பல இந்து கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த இரண்டு கைதிகளுக்கு மட்டும் வட மாகாண முதலமைச்சர் பரிசில்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன் மகசீன் சிறைச்சாலை யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
0 comments :
Post a Comment