Tuesday, January 21, 2014

காலவரையறைகள் விதிப்பது பயனற்றது!! பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலங்கைக்கு காலவகாசம் தேவை - ஐஸ்லாந்து ஜனாதிபதி

மோதல்கள் முடிவடைந்ததன் பின்னர் இலங்கையின் அபி விருத்திகள் பாராட்டத்தக்கது. எஞ்சியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காலவகாசம் தேவை. காலவரையறைகள் விதிப்பது பயனற்றதென ஐஸ்லாந்து ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

ஐஸ்லாந்து ஜனாதிபதி ஒலாபுர் ரெக்னார் கிறின்ஸன் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவை அபுதாபியில் சந்தித்த போது இதனை தெரிவித் துள்ளார்.

இதற்கு முன்னர் இரு தடவைகள் ஐஸ்லாந்து ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியை சந்தித்துள்ளார். மீண்டும் ஒரு சந்திப்பிற்கு வாய்ப்பு கிடைதத்தையிட்டு ஐஸ்லாந்து ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்த வேண்டுமென தெரிவித்த ஐஸ்லாந்து ஜனாதிபதி கடற்றொழில் மற்றும் மீன் உற்பத்திகள் பழச் செய்கை, ஆகியவற்றை வர்த்தக நோக்கில் இலங்கையுடன் இணைந்து திட்டங்களை ஆரம்பிப்பதற்கு அவர் யோசனை தெரிவித்தார்.

தமது நாடு இத்துறைகளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இரு தரப்பு உறவுகளை பலப்படுத்த இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை அடைந்து வரும் முன்னேற்றங்களையும் தெளிவுப்படுத்தினார்.

அனைத்து நிலக்கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டுள்ளனர். 3 இலட்சம் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 11 ஆயிரம் முன்னாள் போராளிகள் சமூகமயப்படுத் தப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் சிறுவர் பேராளிகள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலைகள், சுகாதாரம், நீர்ப்பாசனம், மின்சாரம், கல்வி ஆகிய துறைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி வட மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு அம்மக்களின் விருப்பத்திற்கு இணங்க அவர்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளாத சக்திகள் இலங்கை மீது அழுத்ததத்தை மேற்கொண்டு வருகின்றன. சவால்களை வெற்றி கொள்வதற்கு முடியுமென்றும் வெளி அழுத்தங்கள் இதற்கு தடையாக அமையுமென்றும் ஜனாதிபதி ஐஸ்லாந்து ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com