புலிப்பயங்கரவாதிகள் மனிதப் படுகொலைகள் புரியும்போது ஸ்டீபன் ரெப் போன்றோர் எங்கிருந்தனர்? விமல் வீரவன்ச
விடுதலைப்புலிகள் அருந்தலாவையில் பௌத்த மதகுருமார்களையும் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களையும் கொலைசெய்தனர், கண்டி தலதா மாளிகைக்கு குண்டுவைத்துத் தகர்த்தனர்,கெப்பெட்டிக்கொல்லாவவையில் வாழ்ந்த அப்பாவி .மக்களை வெட்டிக் கொலை செய்தார்கள்.
இங்கு வந்திருந்த அமெரிக்க தூதுவர் ஸ்ரீபன் ரெப் அன்று இவ்விடயங்களை சர்வதேச ஊடகங்களில் அறிந்திருக்கவில்லையா? அவர் இவ்வாறான இடங்களைப் பார்வையிடவில்லை அல்லது அப் பிரதேசங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட சமுகத்தினரைச் சந்தித்து உரையாடாததன் காரணந்தான் என்ன எனகேட்கவிரும்புகின்றேன். இவ்வாறான விடயங்களை ஏன் மனித உரிமை அறிக்கையில் சமர்ப்பிக்கவில்லை. என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச வினா தொடுத்தார்.
நேற்று(15) திருகோணமலையில் உள்ள சேருவிலை பிரதேசத்தில் சோமவதி ஜனசெவன வீடமைப்புக் கிராமத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் அங்குஉரையாற்றுகையில் -
“தற்பொழுது விடுதலைப்புலிகள் இந்தநாட்டில் இல்லை. ஆனால், விடுதலைப் புலிகளை உயிர்ப்பித்தவர்கள் தற்பொழுது வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். வெளிநாட்டில் உள்ள “புலம்பெயர் தமிழர்கள்” என்றஅமைப்பினர் விடுதலைப் புலிகள் செய்த அகோரங்களை மறைத்து இலங்கைக்கும் இராணுவத்திற்கும் எதிராக தடயங்கள் சேகரித்து ஜெனிவாவில் மனித உரிமை மீறல் அமைப்பின் ஊடகாகத் தண்டனை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றார்கள். அதற்காக உள்ளூரிலும் என்.ஜி.ஓக்கள் ஊடாக சில அமைப்புக்களுக்கு நிதி வழங்குகின்றார்கள். அரசாங்கம் இவர்களது ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்தே வருகின்றது.
தற்பொழுது மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜ.நா. மனித உரிமை மீறல்கள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக யுத்த மீறல்கள் என்ற போர்வையில் அறிக்கையிடுவதற்கும் அதன் ஊடாக விசாரணை செய்வதற்குமே இவர்கள் முயற்சிக்கின்றனர். இந்தயுத்தத்தில் இராணுவம் செய்த யுத்த மீறல்கள் என்ன எனக் கேட்க விரும்புகின்றேன். ஆனால், விடுதலைப்புலிகள் கடந்த 30 வருடகாலத்தில் இந்தநாட்டின் பொதுமக்கள், தமிழ் முஸ்லிம் சிங்கள அரசியல்வாதிகள் கொலைகள் வடக்கு மக்களை முடக்கிவைத்திருந்தமை பற்றி அறிக்கை அல்லது தடயம் தேடவில்லை.
உலகின் சரித்திருத்தில் பயங்காரவாதிகளான விடுதலைப்புலிகளை இலங்கை மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு வெற்றி பெற்றுவிட்டதே என்ற கவலையே இந்த மேலைத்தேய நாடுகளின் தலைவர்களது நிகழ்ச்சிநிரலில் உள்ளது. இதற்குபின்னால் இருந்து சர்வதேச நாடுகளினால் வாழ்ந்துவரும் புலம்பெயர் தமிழர்கள் பெரிதும் பரிச்சயம் எடுத்துவருகின்றனர். இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கு ஏற்கனவே சில இலங்கையின் தற்போதைய அரச தலைமைத்துவத்திற்கு எதிரான நடவடிக்கை எடுத்துவிட்டார்கள்” எனவும் குறிப்பிட்டார். -CCN
0 comments :
Post a Comment