சிறைச்சாலை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது! கஜதீர
2012 நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடைச் சிறையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் ஆய்வு நடாத்துவதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய கமிட்டியினரின் அறிக்கை முழுமையான அறிக்கை என தான் ஏற்றுக்கொள்வதில்லை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிரி கஜதீர குறிப்பிடுகிறார்.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில எடுத்துக்காட்டுக்களுடனும், ஆய்வுகளுடனும் தான் உடன்பட முடியாது என அமைச்சர் குறிப்பிடுகிறார். 553 பக்கங்களுடன் கூடிய அவ்வறிக்கையானது ஒரு மாதத்திற்கு முன்னர் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடைச் சிறையில் ஏற்பட்ட மோதலில் சிறைக்கைதிகள் 27 பேர் இறந்ததுடன் மற்றும் சிலர் படுகாயங்களுக்குள்ளாகினர்.
இவ்வாய்வுக்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய ஆய்வுக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி பந்துல அதபத்துவும், குழு உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் குணசேன தேனபந்து மற்றும் வழக்கறிஞர் லலித் அன்தா ஹென்னதி முதலானோரும் அடங்கியிருந்தனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment