பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிபடுத்த சவுதியுடன் உடன்படிக்கை கைச்சாத்து!
சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பணிப்பெண் களின் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை உறுதிபடுத்துவத ற்கான உடன் படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை பணியாளர்களின் உரிய சம் பளம் மற்றும்பாதுகாப்பை உறுதிபடுத்துதல், கொடுப்பனவு உள்ளிட்ட பல முக்கிய விடயளங்கள் குறித்து நேற்று உட்னபடிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை சார்பில் அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் சவூதி அNரிபிய சார்பில் அந்நாட்டு பிரதி தொழில் அமைச்சர் அஹமட் எப்.அல் பஹாய்ட் ஆகியோர் கைச்சாத்திட்டனர். சாரதிகள், சுத்திகரிப்பாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கும் இந்த உடன்படிக்கை அமுலுக்கு வருவதுடன் தொழில் முகவர் நிலையங்கள் உட்பட அனுசரனையாளர்கள் தொடர்பிலும் உடன்படிக்கையில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இவ் உடன்படிக்கைக்கமைய பணிப்பெண்களுக்காக காப்புறுதி வேலை திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment