Saturday, January 11, 2014

லண்டனில் இலங்கை இளம் தமிழ் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலங்களாக மீட்பு...(படங்கள்)

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப் பட்டனர்:- ஏழு மாத ஆண் குழந்தை, ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு இளம் குழந்தைகளின் சடலங்களையும் அவர்களின் தாயாரது சடலத்தையும் பிரித்தானிய காவல் துறை மீட்டுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை (09.01.14) பிற்பகல் லண்டன் நேரம் 5.20ற்கு கணவர் சக்தி வேல் வாகேஸ்வரன் வீட்டுக்கு வந்தபோது மூவருடைய சடலங்களை கண்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வடமேற்கு லண்டன் Woodgrange Close பகுதிக்கு சென்ற காவல்துறை இந்த சடல ங்களை மீட்டுள்ளனர். இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 33 வயதுடைய ஜெயவாணி வாகேஸ்வரன் என்ற இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், தாயினுடைய மரணம் தற்கொலையினால் சம்பவித்ததா? என்ற சந்தேகம் தொடர்வதாகவும் தெரிவித்த காவல்துறை, இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com