Tuesday, January 28, 2014

ஒரே சமயத்தில் 6 குழந்தைகள் பிரசவம் !! (படங்கள் )

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் ஆரோக்கியமான 6 குழந்தைகளை பிரசவித்துள்ளார். கைபர் பகதுன்கவா மாகாணத்திலுள்ள பன்னு மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் 4 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உட்பட 6 குழந்தைகளை ஒரே சமயத்தில் பிரசவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த பிரசவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்தி களை வெளியிட்டுள்ளன.

மேற்படி குழந்தைகளை பிரசவித்த தாயின் பெயர் வெளியிடப்படவில்லை. பிரச வத்தையடுத்து தாயும் சேய்களும் மேலதிக மருத்துவ கவனிப்புக்காக பன்னு விலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குறிப்பிட்ட பெண் வட வாஸிரிஸ்தானிலுள்ள டத்தா கெல் பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 35 வயதான சபிரா என்ற பெண் பெஷாவரிலுள்ள கைபர் போதனா வைத்தியசாலையில் 3 பெண் குழந்தைகள் மற்றும் இரு ஆண் குழந்தைகள் உட்பட 5 குழந்தைகளை ஒரே சமயத்தில் பிரசவித்தமை குறிப்பி டத்தக்கது.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com