Friday, January 3, 2014

யாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவு ள்ளதாக யாழ்.பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளார்.

இம்முறை பட்டமளிப்பு விழாவன் முதல் நாள் அமர்வுகளில் 707 பேருக்கும் இரண்டாம் நாள் அமர்வில் 662 பேருக்கும் என மொத்தம் 1369 பேர் பட்டங்கள் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக வருவதற்கான விண்ணப்பங்கள் பத்திரிகை வாயிலாக கோரப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்தின் இறுதிப் பட்டமளிப்பு விழா இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com