லவ் மூட்டுடன் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த பொலிஸ் மீது யாழில் தாயும் சகோதரர்களும் தாக்குதல்

யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ். மாம்பழம் சந்தி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்குமான பழக்கம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்ததை தொடர்ந்து குறித்த பெண்ணின் தாயார் மகளை போன்று கதைத்து, லவ் பீலிங்கில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
இவ்வாறு வீட்டிற்கு அழைத்த போது, குறித்த பொலிஸார் தான் பழகும் பெண் அழைத்ததாக லவ் மூட்டுடன் டூயட் பாடிக் கொண்டு பெண்ணின் வீட்டிற்குள் சென்றுள்ளார். இதன்போது, அங்கிருந்த குறித்த பெண்ணின் சகோதரன் மற்றும் தாயார் இணைந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலிலிருந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தப்பியோடி யாழ். பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
0 comments :
Post a Comment