Saturday, December 7, 2013

சம்பந்தன் ஆசனத்திற்கு ஆசைப்பட்டு தங்கத்துரையை கொலை செய்தமையை மறந்து விட்டாரா? - பிள்ளையானின் காரசாரமான உரை

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்திலே இடம்பெற்ற வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான விவாத த்தின்போது.என்னைப் பற்றி சில கருத்துக்களை இரா.சம்பந் தன் அவர்கள் முன்வைத்திருந்தார்.அவருக்கும் இந்த சபை யிலே சில விடயங்களை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். தன்னைப்போல் ஆட்சி அதிகாரங்களைப் பெறுவதற்கும் ஆசன த்திற்கு ஆசைப்பட்டும் திருமலையிலே இருந்த இளம் பாராளு மன்ற உறுப்பினர் தங்கத்துரையை திட்டமிட்டு கொலை செய்தமையை மறந்து விட்டாரா?

ஏன் சிறிமாவோ பண்டாரநாயக்க யாழ்ப்பாணத்திலே தமிழ் பல்கலைக் கழகத்திற்கு அடிக்கல் நாட்ட அதனை தடுத்து விட்டு, தமிழர்களுக்கு நாங்களே பல்கலைக் கழகம் அமைப்போம் என கங்கணம் கட்டிக் கொண்டு நிதி சேகரித்து திருகோணமலையில் காணியும் வாங்கிவிட்டு அந்த காணியை இன்றுவரை தனது பெயரிலே வைத்திருப் பதனை என்ன மறந்து விட்டாரா? தற்போது அந்த காணிகளை யார் விற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் எங்களுக்கு என்ன தெரியாதா?

இவ்வாறு எத்தனையோ சுத்து மாத்துக்களை எல்லாம் செய்து விட்டு அரசியல் செய்யும் சம்பந்தருக்கு என்னைப் பற்றி விமர்சிக்க என்ன அருகதை இருக் கிறது,ஈழம் என்கிறார்கள், உரிமை என்கிறார்கள்,தியாகம் என்கிறார்கள்,விடுதலை என்கிறார்கள்.

இதற்காக இந்த சம்பந்தன் என்கின்ற தனி மனிதன் என்ன செய்திருக்கின்றார் என்பதனை இந்த உலகமே அறியும் அதேவேளை பிள்ளையான் என்ன? செய்தான் என்பதனையும் இந்த உலகு நன்கு அறியும்,என முன்னாள் கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் கிழக்கு மாகாண விசேட விவகாரங்களுக்கான ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றாம் நாளான (04.12.2013) மாகாண விவசாய அமைச்சு,தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெற்ற வேளையில் மேற்படி கருத்தினை முன்னாள் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.அவர் தொடர்ந்து பேசுகையில்,

மாகாணத்தின் வரவு செலவுத்திட்டம் என்பது உண்மையில் மாகாணத்தினது அபிவிருத்தி தொடர்பிலான ஆக்கக் கூறுகளை ஒன்றிணைத்ததான ஒரு நிதியியல் சார்ந்த திட்ட அறிக்கை ஆகும். இதன் சாதக பாதகங்களை தெளிவுபடுத்தி அது தொடர்பில் கருத்துக் கூறவேண்டி பொறுப்பு மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையிலே எம்மைச் சார்ந்தாகும்.

ஆனால் இங்கு எதிர் கட்சியிலே அமர்ந்திருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாங்கள் ஏதோ வாய்க்கு வந்த மாதிரி உப்புச்சப்பற்ற பேச்சையே இங்கே பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.பாவம் அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

நீங்கள் தேர்தல் காலங்களிலே எங்களுக்கு அபிவிருத்தி தேவையில்லை. உரிமைதான் வேண்டும் என்று கோசம் எழுப்பி மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்குகளைப் பெற்றீர்கள்.அப்படியானால் இன்றுடன் கிழக்கு மகாண சபை தொடங்கி 2 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. நீங்கள் பெற்ற உரிமைதான் என்ன? அல்லது வேறு ஏதாவது சாதித்திருக்கின்றீர்களா? அதனை மக்களுக்கு தெளிவுபடுத்தவதற்காக இந்த சபையிலே பேசினால் நியாயம்.

அதனை விடுத்தி முழுமையாக அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்படுகின்ற அதாவது உங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட இந்த அபிவிருத்தி சார்ந்த நிதிக்கூற்று அறிக்கை தொடர்பாக விமர்சித்து நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து. அந்த நேரத்தில் தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்திருந்து உரிமையைப் பெறுவதற்கான வழிவகைகளை ஆராய்ந்தால் அது ஓர் ஆக்கபூர்வமான செயலாகும். அதே வேளை தாங்கள் தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளும் நிறைவேற்ப்பட்ட தாகவும் தாங்கள் திருப்தி கொள்ளலாம்.

கிழக்கு மாகாண முதலமைச்சராக நான் பதவி வகித்த காலங்களிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் எந்தவொரு கூட்டங்களிலுமே பங்கு பெறுவதில்லை.திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத் துகின்ற ஓர் மக்கள் பிரதிநிதி. ஆனால் அவர் எந்தவொரு கூட்டங்களிலுமே கலந்து கொள்ளவே இல்லை. நான் நினைக்கின்றேன் அந்த கூட்டங்கள் எதுவுமே உரிமை பற்றியதாகவோ அல்லது தமிழ் ஈழம் அமைப்பதற்கான கூட்டமாகவோ அது அமைந்திருக்கவில்லை. மாறாக அபிவிருத்தி தொடர்பிலான கூட்டங்களாகவே அமைந்திருந்தது.

அதனால்தான் சம்பந்தன் அவர்கள் அவ்வாறான கூட்டங்களிலே கலந்து கொள்ளவில்லை.அந்த முடிவு எடுத்த தலைவர் சம்பந்தன் தனது உறுப்பினர் களுக்கும் தெரிவித்தால் அது நல்லதாகவே அமையும்.எம்மையெல்லாம் துரோ கிகள் என்று முத்திரை குத்த தயாரான யாழ்மேலாதிக்க வாதிகளும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கும் கிழக்கு மாகாணத்தின் எழுச்சி ஓர் பேரிடியாக விழுந்தது.

அதாவது பிள்ளையான் தலைமையில் அமையப் பெற்ற கிழக்கு மாகாண சபை அவர்களது வாயை மூட வைத்தது. அந்த வகையிலே உண்மையில் அவ்வா றானதொரு சூழலை உருவாக்கி தந்த எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் என்றுமே பாராட்டுக்குரியவரே ஆவார். அவ்வா றனதொரு சூழல் உருவாகாமல் போயிருந்தால் எம்மை துரேகிகளாகவே வசைபாடியிருப்பார்கள்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே தங்களது கொள்கைக்கும் அப்பால் அதாவது (இணைந்த வடகிழக்கு எமது தமிழ் தாயகம்)சென்று போட்டியி ட்டார்கள்.எதற்காக இந்த பிள்ளையானை தோற்கடிப்பதற்ககத்தான். அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்திலே தெளிவாகச் சொல்லியிருந்தார்கள்.

அரசுடன் இணைந்திருக்கின்ற தமிழன் வெற்றி பெறக் கூடாது. அதுவும் பிள்ளையான் வெல்லக் கூடாது என்று கங்கணம் கட்டி அலைந்தார்கள். முடியவில்லை.மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏன் கிழக்கு மாகாணத்திலே அரசுடன் இணைந்து போட்டியிட்டு ஓர் தமிழன் பெற்ற அதிகூடிய வாக்கு நான் கடந்த மாகாண சபையிலே பெற்ற 35000 விருப்பு வாக்குகளே தவிர வேறொன்றும் இல்லை. என்பதும் அவர்களுக்கு தெரியாமல் இல்லை.

இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கிழக்கு மக்களுக்காக ஆக்கபூர்வமாக எதனைத்தான் சாதித்திரக்கிறார்கள என்பதனை வெளிப்படையாகக கூறட்டும். முடியாது. ஆனால் இந்த பிள்ளைளான் என்ன செய்திருக்கின்றான் என்பது மக்களுக்குத் தெரியும் என அவரது உரையிலே மிகவும் காரசாரமாக குறிப்பிட்டிருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com