பணத்தால் ஏழை! மனிதாபிமானத்தால் கோடிஸ்வரன் - படல்கும்புறவில் சம்பவம்!
தான் வாழ உறைவிடம் இல்லாத ஒரு மனிதன், தான் வசிக்கும் வீதிக்காக பாதையொன்றை நிர்மாணித்த அபூர்வ நிகழ்வொன்று பதிவாகியுள்ளது. படல்கும்புற பிரதேச செய லக பிரிவில் உள்ள நெனியெல்ல ஹெலகெதரகம பிர தேசம், இயற்கை அன்னையின் அருட்கொடையை பெற்ற போதிலும், மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியாகவும், சுமார் 80 குடும்பங்கள் இக்கிராமத்தில் மிகவும் குறைந்த வசதி களுடன் வாழ்ந்து வருகின்றன.
கடந்த 30 வருடங்களாக ஒற்றையடிப்பாதையில் பல மைல் தூரம் நடந்து, தமது பயணங்களை மேற்கொண்ட கிராம மக்கள் மத்தியில் வாழ்ந்த சமரசிங்க எனும் விவசாயி, நான்கரை இலட்சம் ரூபாவை தனது குடும்பத்திற்கு வீடான்றை நிர்மாணிப்பதற்காக சேமித்து வந்தார்.
இக்கிராமத்திற்கு பாதையொன்றை நிர்மாணித்துக் கொடுக்க, வசதியுள்ள எந்த வொரு நபரும் முன்வராத நிலையில், மாணவர்கள் நடை பயணமாக பாடசாலை க்கும், நோயாளிகள் தோளில் சுமக்கப்பட்டு வைத்தியசாலைக்கும் எடுத்துச் செல்லப் படுவதை, சமரசிங்க அவதானித்து வந்தார்.
இதன் காரணமாக அவர், தமது குடும்பத்திற்கான வீட்டை கட்டும் எண்ணத்தை மறந்து, கிராமத்திற்கான வீதியை நிர்மாணித்தார். இன்று இக்கிராமத்தில் சமரசிங்க வின் முயற்சியினால், வசதி வளம் படைத்த மனிதர்களுக்கு, வசதியற்ற ஒரு மனிதரின் பலத்தை நிரூபிக்குமும் வகையில் புதிய பாதையொன்று உருவாக்கப் பட்டு, மக்கள் மகிழ்ச்சியடைவதை அவதானிக்க முடிகிறது.
0 comments :
Post a Comment