Friday, December 6, 2013

பீதியில் இலங்கை அகதிகள்- தமிழக முகாமுக்குள் இரவில் நடமாடும் பேய் (படங்கள்) !!

தமிழகத்தில் உள்ள மானாமதுரை அகதிகள் முகாமில் பேய் நடமாடுவதாக எழுந்த பீதியால் பொதுமக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.மானாமதுரை மூங்கில் ஊரணியில் 250 இல ங்கை தமிழர்கள் குடும்பத்தினர் வசிக்கின்றனர். கூலி வேலை செய்து பிழைத்து வரும் இவர்கள் மாலை 7 மணிக்கு மேல் வீடு திரும்புவது வழக்கம்.கடந்த மாதம் 23ம் திகதி அகதிகள் முகாமை சேர்ந்த ஜோசப் பல்வேடானா என்பவர் மனைவி யுடன் ஏற்பட்ட தகராறில் முகாமில் உள்ள பலா மரத்தில் ஏறி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

மரணத்திற்குப் பின்னர் அவரது ஆன்மா சாந்தியடையாமல் ஆவியாக உலா வரு கிறார் என்று முகாம் மக்கள் நம்பத்தொடங்கியுள்ளனர். இதனால் இரவு நேரங்களில் அவர்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.தற்கொலை செய்து கொண்ட மரத்தின் அருகில் முகாமிற்கான குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இச்சம்பவத்தால் குடிநீர் பிடிக்க பொதுமக்கள் அஞ்சி வருகின்றனர். மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. வீட்டிற்குள் முடங்கி கிடப்பதாக தெரியவருகிறது.

இதுகுறித்து மரணமானவரின் மனைவி பெரியண்ணா தெரிவிக்கையில்,

எனது கணவர் தற்கொலை செய்து கொண்டது காலையில்தான் தெரியும். தற்போது எப்போது பார்த்தாலும் அவர் மரத்தின் மீது இருப்பது போல தெரிகிறது. மாலை நேர த்தில் அவர் வருகிறார் என யாரும் தண்ணீர் பிடிக்க கூட வருவதில்லை என்றார்.

அகதி முகாமில் வசிக்கும் சரோஜா என்பவர் இது குறித்து குறிப்பிடுகையில்,

ஜோசப் இறந்ததில் இருந்து மாலையில் யாரும் வீட்டைவிட்டு வெளியே வருவ தில்லை, வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றோம்.எனவே இந்த பலாமரத்தை அகற்ற வேண்டும் என்றார்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com