Thursday, December 12, 2013

வடக்கு மாகாணசபையின் திட்ட முன்மொழிவுகள் அரசியலமைப்புக்கு விரோதமானது- ஆளுனர்

வடக்கு மாகாணசபை தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில், சில புதிய திணைக்களங்களை உருவாக்க முயன்றுள்ளதாகவும், இது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் எச்சரித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடமாகாணசபை உறுப்பினர்களும், நாட்டின் அரசியலமைப்பையும், தேசிய கொள்கையையும் மதித்து செயற்பட வேண்டும் ஆனால் வடக்கு மாகாணசபை தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் புதிய திணைக்களங்களை உருவாக்கும் திட்டங்களை முன்மொழிந்துள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது எனக்குறிப்பிட்டார்.

மேலும் வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு நான் ஒப்புதல் வழங்கியிருந்ததுடன் அரசியலமைப்புக்கு இணங்கவே மாகாணசபையால் அதிகாரசபைகளை உருவாக்க முடியும் என்ற குறிப்பையும் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன் ஆனால் அதனை கவனத்தில் எடுக்காது அவர்கள் வீடமைப்பு திணைக்களம் மற்றும் போக்குவரத்து திணைக்களம் என்பனவற்றை உருவாக்க முயற்சிக்கின்றனர் எனவே அரசியலமைப்பின் படியும், உறுப்பினர்களுக்கான தேசிய கொள்கைப்படியும் செயற்படும்படி எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.

வடக்கு மாகாணசபை திணைக்களங்களை உருவாக்க முயற்சிக்கும் போது அரசியலமைப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் குறிப்பாக சில நிர்வாக அலகுகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அதிபர், மாகாண ஆளுனர் மற்றும் மாகாண முதல்வரின் அனுமதி தேவை எனக்குறிப்பிட்டதுடன் இவரகளால் மட்டுமே, போக்குவரத்து, வீடமைப்பு அதிகாரசபைகளை உருவாக்க முடியும் என்று அவர்களுக்கு கூறியதாக குறிப்பிட்டார்.

மேலும் இம்முறை அவர்களின் வரவு செலவுத்திட்ட விவாதம் முழுவதும் வடக்கு மாகாணசபைக்கு ஒரு சிவிலியன் ஆளுனர் தேவை என்பதை மையப்படுத்தியதாகவே இருந்ததுடன் அவர்கள் கூறும் ஒருவார்த்தையாக காணப்படுவது ஒரு இராணுவ பின்னணி கொண்ட ஆளுனர் தேவையில்லை என்பதுதான் ஆனால் இராணுவ அல்லது சிவில் ஆளுனர் என எவராயினும் அரசியலமைப்பு படியே செயற்பட முடியும எனக்குறிப்பிட்டார.

ஆனால் இவர்களைப் பொறுத்தவரை அவர்கள் சொல்வதற்கு ஆமாம் என்று தலையாட்டக் கூடியதும் மாகாணசபை பற்றிய எந்த அறிவுமில்லாத ஒருவர் ஆளுனராக நியமிக்கப்பட்டால் தான் மகிழ்ச்சி கொள்வார்கள் போல என தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com