Sunday, December 1, 2013

கலைத்துறை பட்டதாரிகளுக்கு புதிய பாடதிட்டம்-உயர்கல்வி அமைச்சின் செயலாளர்!

தொழில் சந்தையை இலக்காகக்கொண்டு கலைப் பட்டதாரிகளுக்கான புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தகவல் தொழில்நுட்ப பாடத்தையும் கற்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் வருடந்தோறும் சுமார் 3000 ஆசிரியர்கள் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டிய உயர்கல்வி அமைச்சின் செயலாளர், ஆசிரிய தொழிலுக்கு பொருத்தமானவர்களாக அவர்களை மாற்றும் பொருட்டு ஏனைய தொழிற்பயிற்சிகளையும் வழங்குவதற்கு எண்ணியுள்ளதாக தெரிவித்ததுடன் இவற்றுக்கு மேலதிகமாக சுற்றுலா, கதிரியக்க, தகவல் தொழில்நுட்பம், கிராம அபிவிருத்தி போன்ற பல்வேறு துறைகளில் ஆசிரியர்கள் தகைமைகளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com