நாட்டுக்கு இப்போது குறைவாக இருப்பது கஸினோ மட்டுந்தான்! - விமலரத்ன தேரர்
இந்நாட்டுக்கு இப்போது குறைவாக இருப்பது கஸினோ மட்டுந்தான்.. அதனால் அதனைக் கொண்டுவருவதற்கு முயற்சி மேற்கொள்கிறார்கள் என ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழக பீடாதிபதி பெல்லன்வில விமலரத்ன தேரர் குறிப்பிடுகிறார்.
ஸ்ரீபோதிராஜ அறநெறிப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவின்போதே தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இன்று நாட்டின் அரசியல்வாதிகள் சீர்கெட்டுப் போயுள்ளனர். அவர்களின் ஊழல் மோசடிகள். குற்றச் செயல்கள் பற்றி, திருட்டுத்தனங்கள் பற்றி நாங்கள் ஊடகங்கள் வாயிலாக நாளுக்கு நாள் அறிந்து கொள்கிறோம். இவர்களினால் பிள்ளைகளுக்கு எவ்வித முன்னுதாரணங்களும் கிடைப்பதில்லை. இதனால் பிள்ளைகளை சீரிய முறையில் வளர்க்கும் ஒரே இடமாக அறநெறிப் பாடசாலைகளே காணப்படுகின்றன.
இந்நாட்டுக்குக் குறையாக இருப்பது இப்போது கஸினோ மட்டுமே. தற்போது அதனையும் கொண்டுவர முயற்சிக்கின்றார்கள். அவ்வாறான சூழ்நிலையில் மாணவர்களுக்கு ஒழுக்கத்தைப் புகட்ட முடியாது. தேவையிருந்தால் அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் ஞாயிறு வகுப்புக்கள் நடத்தப்படாதிருக்க ஆவன செய்ய முடியும். யாருக்குச் சொன்னாலும் யாரும் ஞாயிறு வகுப்புக்களை நிறுத்தவதாக இல்லை.
இன்று நாடெங்கிலும் இந்த பிரத்தியேக வகுப்புக் கலாச்சாரம் இருப்பதால் மாணவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு அறநெறிக் கல்வி இல்லாமலாகிவிட்டது. பிள்ளைகள் சித்தியடைவது போன்றதல்ல அறநெறிப் பாடசாலைகளினால் கிடைக்கும் அறிவு. ஞாயிறு வகுப்பு தவிர பிரத்தியேக வகுப்புக்கள் வாரத்தில் ஆறரை மணித்தியாலங்கள் நடைபெறுகின்றன. பிள்ளைகளை அறநெறிப் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மென்மேலும் பெற்றோர் முழு முயற்சி எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment