Sunday, December 1, 2013

வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் மாணவர்களின் கையில் கற்பூரம் கொழுத்தி கோபம் தீர்த்த ஆசிரியர்

வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் இருந்து உண்மையை வரவைப்பதற்காக மாணவர்களின் கையில் கற்பூரம் கொழுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர் வகுப்புக்கு வந்த போது தகாத வார்த்தைகளுடன் கூடிய கடிதம் ஒன்றினை ஆசிரியர் மேசையில் இருந்து எடுத்துள்ளார். அதை வாசித்த ஆசிரியருக்கு கோபம் வந்துள்ளது. இதை யார் எழுதினது என மாணவர்கள் மீது ஆசிரியார் சினத்துடன் சீறிப் பாயந்துள்ளார்.

மாணவர்கள் தாம் இதை எழுதவில்லை என மறுப்புத் தெரிவிக்க, சினத்தினால் வெறிகொண்ட ஆசிரியர் மாணவன் ஒருவனை விட்டு கற்பூரம் வாங்கி 19 மாணவர்களின் கையில் கொழுத்தி சத்தியம் செய்யுமாறு பேசியுள்ளார்.

நெருப்பு கையில் சுட்டதினால் 14 மாணவர்கள் கற்பூரத்தை கீழே போட்டுள்ளனர். இவர்களுடைய கையில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது. ஏனைய 5 மாணவர்களும் கற்பூரத்தை கையில் எரிந்து கொண்டிருந்த நிலையில் நீண்ட நேரம் வைத்திருந்தமையாhல் காயம் ஏற்பட்டுள்ளது.

செய்தியறிந்த பெற்றோர் குழம்பியபடி பாடசாலைக்கு சென்று அதிபருடன் முரண்பட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலைகள் ஒழுக்கத்தையும், கல்வியையும் போதிக்க வேண்டிய நிலையில் வதை கூடமாக தொழிற்படுவது கவலையளிப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். குறித்த ஆசிரியர் தனது பிள்ளை என்றால் இவ்வாறு செய்திருப்பாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

1 comments :

Anonymous ,  December 1, 2013 at 8:59 PM  

specialy except a few the other Jaffna male teachers from those days onwards have their swollen heads.They behave like the mightyones from the head to bottom.We have our bitter experiences with those narrow minded teachers.But the students also should behave within their limits.This is the grave mistake of the parents.Teachers without the psychological knowledge may face enough difficulties in future.Serials and cinmea too encourage the students to behave like Bullying Masters.The film directors may think that they make funs,but the never understand that they push
the younger generations into the pit of sins

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com