அமைச்சர் மகிந்தானந்தவுக்கு கொழும்பெங்கிலும் காணி, எல்லா வங்கிகளிலும் வைப்பு!!
விளையாட்டமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே கொழும் பெங்கிலும் காணிகளுடனும் வங்கிக் கணக்குகளுடனும் இருக்கின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாரா ளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடுகி ன்றார். மாத்தறை ரஸ்ஸன்வதனியவில் இடம்பெற்ற கூட் டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகிந்தானந்த அழுத்கமகேயின் மனைவி, அவருடன் வாழ முடியாது என்று கூறி விவாகரத்துடன் உதவித்தொகை கேட்டு நின்றார். அதனை ஆராயும்போதுதான் மகிந்தானந்தவின் சொத்துக்கள் பற்றிய விபரம் வெளிச்சத்துக்கு வருகின்றது. கொழும்பெங்கிலும் காணி.... எல்லா வங்கிகளிலும் வங்கிக் கணக்குகள்.... அப்பாடா... இந்த மனுஷனுக்கு எப்படி வந்ததோ இப்படிச் செல்வம்...
இதற்கு முன் ரோஹித்த அபேகுணவர்த்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு, 450 இலட்சம் தேடியது எவ்வாறு எனச் சொல்வதற்கு செல்ல முன்னரேயே அழைக்கப்பட்ட நாளிரவு பாம்பினால் தீண்டப்பட்டார். சரியான பாம்பு அவர். வைத்தியசாலைக்குச் சென்றார். இலஞ்ச ஆணைக்குழுவின் முன் செல்லவில்லை. மகிந்தர் இதற்கு என்னதான் செய்தார் தெரியுமா? ஒரு நாள் இரவிலேயே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவரை மாற்றினார்“ என்றும் அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment