பாராளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தில் வாழவியலாது! - மகிந்தானந்த
தனக்குக் கிடைக்கின்ற பாராளுமன்ற ஊதியத்தினால் மட் டும் வாழவியலாது எனவும், அதனால் தான் வியாபாரம் செய்வதாகவும் விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே குறிப்பிடுகிறார்.
அதைப்பற்றி எவருக்கும் தேடிப் பார்க்கவியலும் எனக் குறிப்பிடுகின்ற அமைச்சர், தன்னிடம் பாரிய அளவு சொத்துக்கள் உள்ளதாக ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து தனக்குக் கறிபூசுவதாகவும், அவ்வாறு சொத்துக்கள் பெற பணம் எங்கிருந்து வந்ததாக கேள்வி கேட்பதாகவும் குறிப்பிட்டார்.
தனது தந்தை முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் என்பதைத் தெளிவுறுத்திய அவர், பெயர் பெற்ற மூன்று விளையாட்டுச் சங்கங்கள் இணைந்து தனக்கு அவப்பெயர் உண்டாக்க முயன்றுவருவதாகவும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment