Monday, December 9, 2013

யாழில் ஏற்பட்டுள்ள பாரிய வளர்ச்சியானது புலிகளினாலோ அல்லது த.தே.கூட்டமைப்பினாலோ ஏற்பட்டதல்ல - மஹிந்த

வடக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பாரிய கல்வி வளர்ச்சி புலிகளினாலோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினாலோ ஏற்பட்டதல்ல எனவும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குக் கிடைத்த பிரதிபலனே அது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிபிலை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிபிலை பிரதேச சபைக் கட்டிடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யுத்தம் நடைபெற்ற யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கு நூற்றிபதினேழு வீதமாகக் கல்வி வளர்ச்சியடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி; இந்த வளர்ச்சிக்கு புலிகளின் செயற்பாடுகளோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளோ காரணமல்ல. அரசாங்கத்தின் செயற்பாடு களுக்குக் கிடைத்த பிரதிபலனே அது என்பதையும் இனவாதத்தை தூண்டிவிட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதையும் அனைவரும் உணர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாடு என்ற ரீதியில் அனைவரும் இணைந்து இதனைக் கட்டியெழுப்ப வேண்டும். யுத்தத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மொனராகலை மாவட்டமும் ஒன்று. நாட்டின் முழு இயல்பு வாழ்க்கையும் சீரழிந்திருந்த காலம் அது.பாடசாலைகளுக்குச் செல்ல பிள்ளைகளுக்கு சுதந்திரம் இருக்கவில்லை. இப்போது அந்த நிலை மாறி கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 வருடத்திற்கு முன்பு 100ற்கு 39 வீதமாக இருந்த மந்த போசனம் தற்போது 17 வீதமாகக் குறைவடைந்துள்ளது. மந்த போசனம், வறுமை, குறைந்த வருமானம் பெற்ற குடும்பங்கள் நாட்டில் ஏற்பட்டுவரும் அபிவிருத்தி விவசாயப் புரட்சியினால் அந்நிலையிலிருந்து மாற்றம் பெற்று தம்மை பலப்படுத்தி வரும் யுகம் இதுவாகும். இந்தியா, பாகிஸ்தான், வியட்நாம் என அலைந்த இந்த நாட்டு மக்களுக்கு அரிசி தேடிய யுகத்தை நாம் மறந்து விட முடியாது. அந்த நிலை மாற்றம் அடைந்து நாம் அரிசி, சோளம் போன்றவற்றில் தன்னிறைவு கண்டு அவற்றை வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யும் யுகத்தை உருவாக்கியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ப பல வசதிகளை நகர்ப்புறத்தில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ஆரோக்கியமான பிள்ளைகள் ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் அனைவரும் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.

நம் நாட்டில் அனைவருக்கும் சொந்த வீடு என்ற மஹிந்த சிந்தனைக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். 60,000 வீடுகள் என நாம் ஆரம்பித்தோம். எனினும் தற்போது குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன. நகருக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தியை நாம் கிராமங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளோம்.

கிராமங்களின் பிரச்சினைகள் அந்தந்த கிராமங்களுக்குள்ளேய தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். நாடு அழகுபெரும் போதும் அபிவிருத்தியடையும் போதும் அதன் பெருமை நாட்டு மக்களுக்கே நாடும் மக்களின் வாழ்வும் அழகுபெற வேண்டும் அதுவே எமது எதிர்ப்பார்ப்பு எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

2 comments :

ஈய ஈழ தேசியம் ,  December 9, 2013 at 10:10 AM  

புலிகளினால் பேரவலம் மட்டுமே கிடைத்தது. தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினால் ஒருபோதுமே வடக்கில் அபிவிருத்தி ஏற்பட போவது இல்லை.

Anonymous ,  December 9, 2013 at 5:47 PM  

Exactly correct.Will the tamil mob illusioned by the tamil politicians come out of the dark tunnel...?because they are in the giant grips of satans

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com