225 அலங்கார மீன்களை கடத்த முற்பட்டவர் கைது!
சட்டவிரோதமாக ஒரு தொகை அலங்கார மீன்களை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முற்பட்ட ஒருவரை நேற்று(27.12.2013) இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 225 அலங்கார மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் லேஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மீன்கள் அனைத்தையும் இவர் கொங்கொங் நாட்டுக்கு கொண்டு செல்ல முற்பட்டதாக சுங்க திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment