140 மில்லியன் ரூபா செலவில் யாழ் புகையிரத நிலையம் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வடக்கு ரயில் சேவைக்கான புனரமைப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதுடன் இதன் ஒருபகுதியாக தற்போது யாழ் புகையிரத நிலைய புனரமைப்பு பணிகள் 140 மில்லியன் ரூபா செலவில் நடைபெற்று வருவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடபகுதிக்கான புகையிரதச் சேவைகள் முற்றாக செயழிந்துள்ள நிலையில் தற்போது இந்திய அரசாங்கத்தினால் புணரமைப்பு செய்யப்பட்டு வருவதுடன் வவுனியாவில் இருந்த பளை வரையான புகையிரதப் பாதை புனரமைப்புப் பணிகள் தற்போது முடிவடைந்திருப்பதுடன் கிளிநொச்சி வரை நடைபெறும் வடக்கு புகையிரத சேவை விரைவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும் எனக்குறிப்பிட்டார்.
மேலும் புணரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக யாழ்ப்பாண புகையிர நிலையத்தின் மேல்த்தளம் முற்றாக இடிக்கப்பட்டு புதிய மேல்த்தளம் அமைக்கப்பட்டு வருவதுடன் கீழ் தளமும் நவீன முறையில் அமைக்கப்படவுள்ளதுடன் உள்ளக வீதிகளும் அமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment