Friday, November 15, 2013

அழைப்பு எதுவும் விடுக்காமல் CHOGM மக்கள் பேரவைக்கு நுழைந்த பிரித்தானிய அமைச்சரால் சலசலப்பு!

பொதுநலவாய மக்கள் பேரவை மாநாட்டின் இறுதி நிகழ் விற்கு அழைப்பு எதுவுமின்றி வருகை தந்த பிரித்தானிய வெளிநாட்டு அலுவலக ராஜாங்க அமைச்சர் ஹியுகோ சுவயர் இலங்கை தொடர்பில் தவறாக கருத்துக்கள் தெரி வித்தது, தொடர்பில் பொதுநலவாய மக்கள் பேரவை உப குழுத்தலைவர் லலித்சந்ரதாஸ அடங்கலான இலங்கைப் பிரதிநிதிகள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இவரின் செயற்பாடு தொடர்பில் பொதுநலவாய செயலாளர் நாயகத்திற்கும் பிரித்தானிய அரசாங்கத்திற்கும் எழுத்து மூலம் முறையிடப் போவதாகக் கூறிய டாக்டர் லலித் சந்ரதாஸ மக்கள் பேரவையின் இறுதி அறிக்கை கைய ளிக்கும் நிகழ்வை இலங்கைப் பிரதி நிதிகள் பகிஷ்கரிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொதுநலவாய மக்கள் பேரவை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு பண்டபத்திலுள்ள ஊடக நிலையத்தில் நடைபெற்றது. இங்கு பொதுநலவாய மக்கள் மன்ற தலைவர் சேர். ஆனந்த் சத்யானந்த், உபகுழு தலைவர் டாக்டர் லலித் சந்ரதாஸ, சேவாலங்கா ஸ்தாபகர் தலைவர் குமார நவரத்ன ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த உப குழுத்தலைவர் லலித் சந்ரதாஸ, சகல சமூக அமைப்பு பிரதிநிதிகளும் இணைந்து மக்கள் மன்றத்தின் பிரகடனத்தை தயாரித்து அது குறித்து இறுதிநாளில் ஆராய்ந்தோம். இங்கு அழைப்பு எதுவுமின்றி வந்த பிரித்தானிய அமைச்சருக்கு பேச அவ காசம் வழங்கப்பட்டது. இது தொட ர்பில் எமக்கு சந்தோஷம் உள்ளது. பிரகடனம் தொடர்பில் அவர் பேசுவார் என நினைத்தோம். ஆனால் அவர் இலங்கை மற்றும் மாலைதீவை விமர்சித்து பேசினார்.

இதன் மூலம் இலங்கையிலுள்ள சிவில் அமைப்புகளுக்கும் அரசாங்கத் துக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் எம்மிடம் வினவியுள்ளது. மனித உரிமை, நல்லாட்சி என்பன குறித்துப் பேசும் பிரித்தானியா இவ்வாறு நடந்து கொண்டது குறித்து அதிருப்தி அடைகிறோம். இது தொடர்பில் பிரித் தானியாவுக்கு அறிவிக்க உள்ளோம். மக்கள் மன்றத்தின் அறிக்கை எதிர்வரும் சனிக்கிழமை வெளிவிவகார அமைச்சர்களுக்கு கையளிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்காதிருக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பில் மக்கள் பேரவையுடன் பேச உள்ளோம் என்றார்.

2 comments :

Anonymous ,  November 15, 2013 at 10:31 AM  

Brits always respect tradition and
customs,but this particular Brits VIPs behaviour is something unusual intolerable,Completely unacceptable.
This should be taken into serious consideration and the particular VIP
should be given with a condemnation letter,not to repeat this kind of behaviour in future.We have a doubt this particular VIP may be thinking that Sri Lanka is a colony.

ஈய ஈழ தேசியம் ,  November 15, 2013 at 12:38 PM  

இந்த வெள்ளை புலி ஆதரவாளர்களின் வாக்குகளை பெற செய்த சுத்து மாத்து

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com