Monday, November 4, 2013

ஜெனீவா ஆட்டம் முடிந்தது! CHOGM ஆட்டத்தை தொடங்கினர் சென்ல் 4! சந்தையில் இசைப்பிரியா!! – குணா!

சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரபல்யமான மாநாடுகள் நெருங்கும் போது எல்.ரி.ரி.ஈக்கு சார்பான புலம்பெயராளர்களும் அரச சார்பற்ற சில சக்திகளும் இலங்கை அரசிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பரப்பி வருவது சம்பிரதாயமாக மாறியுள்ளது. இதனடிப்படை யில் சனல் 4 தெலைக்காட்சியின் இலங்கை அரசின் மீது மக்களினதும் உலக நாடுகளினதும் வெறுப்பை அதிகரிக் கவும் உலகளவில் இலங்கை அரசாங்கத்தை குற்றவாளி யாக காட்டுவதற்கும் எல்.ரி.ரி.ஈ அமைப்பைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற 27 வயதுடைய பெண்ணை இலங்கை இராணுவத்தினர் உயிருடன் பிடித்ததாகவும் அதன் பின்னரே, பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள் ளது எனவும், செனல்4 புதிதாக காணொளியொன்றை வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவில் மனித உரிமைகள் தொடர்பான மாநாடு நடைபெறும்போது பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இராணுவ பாதுகாப்பில் இருந்தபோது கொலை செய்யப்பட்டதாக செனல் 4 காணொளியொன்றை வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெற உள்ள நிலையில் எல்.ரி.ரி.ஈ பெண் போராளியை இராணுவம் உயிருடன் பிடித்ததாகவும், அதன் பின்னரே, பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளது என வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஆனால் குறித்த வீடியோவை முற்றாக மறுத்த இலங்கை இராணுவ பேச்சாளர், அந்த வீடியோ உண்மையானதா என்று நிபுணர்கள் தான் ஆராய்ந்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும், வீடியோவில் அந்தப் பெண்ணைத் தான் காட்டுகிறார்களா அல்லது யாரை யாவது நடிக்க வைத்திருக்கிறார்களா என்று எங்களுக்கு தெரிய வில்லை. இது நடிப்பாகக் கூட இருக்கலாம். இந்த வீடியோவை தொழில் நுட்ப ரீதியில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும், இந்த வீடியோ ஒரு நாடகம் என்றுதான் கருதுகிறோம் எனவும், செனல்4 இந்த வீடியோவை காமன்வெல்த் மாநாட்டை இலக்கு வைத்துதான் வெளியிட்டிருக்கிறது. நீங்கள் பொறுமையோடு இருந்தால் அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் இன்னும் ஒரு வீடியோவோ நிழற்படமோ வெளியாகலாம். அது தான் சேனல் 4வின் பழக்கம் என்று எல்லோருக்கும் தெரியும் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் உண்மையைத் திரித்து தமக்குச் சாதகமாக பொய் கூறுவதில் எப்போதுமே புலிகளும் புலி ஆதரவாளர்களும் வல்லவர்கள். அதற்கு சிறு உதாரணம் யுத்தம் நடைபெற்ற காலத்தில் செஞ்சோலை முகாம் தாக்கப்பட்டபோது அதில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பாடசலை மாணவர்கள் என்றே அவர்கள் உலகுக்குக் காட்ட முயன்றனர். ஆனால் அது ஒரு யுத்தப் பயிற்சி முகாம் என்பதனை அரசாங்கம் தெட்டத்தெளிவாக நிரூபித்ததை நாம் அனைவரும் அறிவோம்.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் விடுதலைப் புலிகளின் கேர்னல் பதவி நிலை கொடுக்கப்பட்ட ஒரு பெண் போராளியை இலங்கை இராணுவத்தினர் கொடூரமாக கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தும் செனல்4, கடந்த 30 வருட யுத்தத்தில் எல்.ரி.ரி.ஈயினரால் பல இலட்சக்கணக்கான ஆண் பெண் சிறுவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்தையும், தமது சொந்த சமூகத்தை கொன்று குவித்த எல்.ரி.ரி.ஈ.யினரின் அட்டூழியங்களையும், இவ்வாறு ஆவனப்படங்கள் மூலம் தயாரிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்குறியாகவே உள்ளது. எல்.ரி.ரி.ஈ யினரால் கொலைசெய்யப்பட்ட பொதுமக்களை வைத்து படம் எடுத்தால் அவற்றை அதிக விலைக்கு விற்கமுடியாது என்பதற்காகவா அல்லது எல்.ரி.ரி.ஈ யினர் தமது சொந்த சமூகத்தை கொன்று குவித்ததை சர்வதேச சமூகத்தினருக்கு மறைப்பதற்காகவா செனல்4 இவ்வாறு செயற்படுகின்றது.

உலகிலேயே மிகக் கொடூரமான மனித அட்டூழியங்களை புரிந்த அமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதை உலகத்தார் அனைவரும் அறிவர். இவர்கள் "விடுதலை" இயக்கம் என தம்மை பெயர்சூட்டிக் கொண்ட போதிலும், புரிந்த காரியங்கள் யாவும் விடுதலைக்கு மாறானவையே! போர்க்கைதிகள் உட்பட, தமது சொந்த இனத்தை சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் சித்திரவதை செய்து 30 வருட காலமாக மிகக் கொடூர மனித அட்டூழியங்களை புரிந்துவந்த ஒரு பயங்கரவாத அமைப்பிற்கு சில சர்வதேச அமைப்புகளுக்கள் துணை போவது வேடிக்கையாக உள்ளது.

அத்துடன் இறுதி யுத்தத்தில் அரசாங்க படையினருக்கு களங்கம் ஏற்படும் விதமாகப் புலிகள் தமது மக்கள் மீது துப்பாக்கி பியோகங்களை நடத்தியிருக்கின்றனர். அத்துடன் தமது போராட்டத்தையும் சரியென காட்டுவதற்கு புலிகள் இறுதி யுத்தகளத்தில் செய்த கொடுமைகள் ஏராளமானவை. உண்மையில் இங்கு அரசாங்க படையினருக்கு களங்கத்தை ஏற்படுத்த தனது இன மக்களை கொன்றது கொடுமையிலும் கொடுமை. இவ்வாறு புலிகள் செய்ததை மூடிமறைப்பதும், அதை சுயவிமர்சனம் செய்ய மறுப்பதும் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என்பதை அன்னும் அந்த புலிப்பினாமிகள் உணரவில்லை.

ஆனால் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தி சரணடைந்த எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி அவர்களை சமூகத்துடன் இணைத்து ள்ளதுடன் சரணடைந்த சிறுவர் போராளிகளுக்கு கல்வியை தொடர வாய்ப்பை வழங்கி அவர்களுக்கு சிறந்ததோர் எதிர்காலத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அத்துடன் பயங்கரவாதத்தை அழித்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் அச்சம், பீதியின்றி தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பி துரித முன்னேற்றம் அடைந்துவரும் இவ்வேளையில், இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுமானால் தாம் இதுவரைகாலமும் ஈட்டிவந்த வருமானத்தை முற்றாக இழக்க நேரிடும் என்ற பீதியில் சில புலிப் பினாமிகள் இலங்கைக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு, மீண்டும் இலங்கையில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அப்பாவி தமிழ் மக்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டள்ளமை தெளிவாக புலனாகின்றது இதை சர்வதேசம் வெகுவிரைவில் உணர்ந்தால் தழிழ் மக்களுக்கு விமோச்சனம் தான்!

7 comments :

Anonymous ,  November 4, 2013 at 1:20 AM  

Well written!

Mulippaarkala Aattu manthai kootankal????????????????????

Intha porukkiyal sollum kathai ellaam intha aattu manthaikal koottaththu Thane!

Anonymous ,  November 4, 2013 at 6:22 AM  

புலிகள் செய்த கொடுமைகள் அந்த பாதிப்பை உணர்ந்தவர்களுக்கத்தான் தெரியும். அதை சொல்லி உணரவைக்கமுடியாது . பட்டிருந்தால்தான் தெரியும் மகிந்த எப்பாடு பட்டாவது புலிகளின் கதையை முடித்தார். ஆனால் அதை பொறுக்கமுடியாத கழிவுகள் இவ்வாறான வேலைகளை செய்துவருகின்றனர். இவ்வாறான வேலைகளால் மகிந்தவை ஒன்றும் செய்யமுடியாது!

Arya ,  November 4, 2013 at 10:31 AM  

" கந்தன் கருணை " படுகொலை போன்றவற்றை மீண்டும் வெளிக்கொணர வேண்டும், அப்படியான கொலைகளை செய்து விட்டு இப்போது ஐரோப்பாவில் வசிக்கும் புலிகளை போர் குற்ற வாளிகளாக அறிவிக்க வேண்டும்.

Anonymous ,  November 4, 2013 at 10:42 AM  

Diplomatic brains always work well,rather than the ordinary brains.
They know very well the releases of C4 at the important events happening at any part of the world.This is easily comparable to the kinder garten children and the teacher.

Anonymous ,  November 4, 2013 at 12:56 PM  

புலிகள் தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்டு, மிகக் கொடூரமான முறையில் தங்களது எதிரிகளை படைவீரர்களை மட்டுமல்ல, தமிழர்களுக்குள்ளேயே தங்களது நிலைப்பாட்டினை ஆதரிக்காதவர்களையும், மிதவாதிகளையும், ஈவு இரக்கமின்றி கொன்றவர்கள் என்பதையும் மறக்கக் கூடாது.

அவர்கள், தங்களது கொடூரச் செயல்களுக்குக் காரணம் கற்பித்தார்களே தவிர, அதற்காக வருந்தவில்லை, அந்தப் பாதையிலிருந்து மாறவும் இல்லை. வாள் எடுத்தவன் வாளால் தான் சாவான் எஎன்பது போல், அவர்களது முடிவும் இருந்தது.

Anonymous ,  November 4, 2013 at 4:33 PM  

WHY NOT C4 PRODUCE TRAILORS AND FILMS ABOUT THE T /REBELS TORTURE CAMPS FOR THE VIEWERS TO HUDDLED TOGETHER

Anonymous ,  November 4, 2013 at 6:34 PM  

எல்லாம் பிரபாகரனின் அவசர புத்தியும் ,நிதானம் இன்மையுமே காரணம்.இந்திய இராணுவம் வந்த பொது சிறிது பொறுமை கடைப்பிடித்திருக்கலாம்.
பிரேமதாசா உதவியுடன் டென்மார்க் இல் பாதுகாப்பாய் இருந்த மனைவி ,பிள்ளைகளை போர் களத்திற்கு வாழ கூப்பிட்டார்.
ராஜீவ் கொலையால் தமிழ்நாடே உருகியது.இன்று தி.மு.க. அ .தி.மு.க. காங்கிரஸ் தமது செல்வாக்கை பலப்படுத்த எனென்ன உல்டாக்கள் செய்யலாமோ அவற்றை செய்கிறார்களே தவிர இலங்கை ஏழை தமிழரை பற்றி அவர்கள் கவலை படப்போவதில்லை..வர வர தமிழன் கேனைபயல்களாகி விட்டார்களா ?
எல்லாதவறுக்கும் புலி தலைவரே காரணம். ஹிட்லர் மாதிரி

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com