Thursday, November 28, 2013

சிறிதரனின் அறிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு இல்லை: பிராபகரனை தேசிய தலைவராக ஏற்கமுடியாது? சம்மந்தன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் மாவீரர் நாள் தொடர்பாகவும் கடந்த 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் புகழ் பாடியிருந்தார்.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, சிறிதரன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அது கூட்டமைப்பின் நிலைப்பாடு இல்லை. எமது நிலைப்பாட்டினை நாம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டுள்ளோம்.

தேர்தல் கூட்டங்களில் கூட நாம் பிரபாகரனை புகழ்ந்து சிறிதரன் மாதிரி பேசவில்லை. அவரும் பேசவில்லை. அவர் அவ்வாறு பேசியிருந்தால் நாம் அதற்கு அனுமதித்திருக்க மாட்டோம். எமது முடிவு தேர்தல் விஞ்ஞாபனம் தான் என்றார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புலிகளும் போர் குற்றவாளிகள் அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியிருந்ததுடன் 13வது திருத்தச் சட்டத்துடன் கூடிய மாகாணசபை முறையை தீர்வாக அங்கீகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4 comments :

Anonymous ,  November 28, 2013 at 7:19 PM  

சுதந்திர போராட்ட வீரர்? அப்படிஎன்றால் என்ன அர்த்தம்?
ஈழத் தமிழ் மக்களுக்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை, சூழ்நிலைகளை தன்னலம் கருதி தவற விட்டு, கடைசியில் வன்னியில் அப்பாவி உயிர்கள் இழப்பதற்கும், சொத்துக்கள் அழிவதற்கும், மிஞ்சிய மக்கள் பிச்சைஎடுப்பதற்கும் காரண கர்த்தாவான மேதகுதலைவர் என்பதே.

இது உலகில் எவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் இதை ஒரு சிலரால் இன்றும் புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடியாத மனநிலை என்றால், ஏதோ ஒரு குறைபாடு அல்லது ஒரு கள்ள நோக்கம் உள்ளது என்பதே அர்த்தமாகிறது.

கயவர் கூட்டம் திருந்தப்போவதில்லை.

Anonymous ,  November 28, 2013 at 7:40 PM  

IT IS 100% TRUE.

Unfortunately the Western country Tamils are still in a narrow circle.
They still have been wasting money and time for useless things and unnecessary decorations for their supper men, while there a lots of Tamils in Sri Lanka are begging for a day meal. It is really big SHAME on our Tamil society in the Western countries.Specially shame on the show offs and paper tigers among the London Tamils.

Anonymous ,  November 29, 2013 at 3:41 AM  

HON. Sampanthan is correct.

சுதந்திர போராட்ட வீரர்??
ஈழத் தமிழருக்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை, சூழ்நிலைகளை தவற விட்டு, கடைசியில் வன்னியில் அப்பாவி மக்கள் உயிர்கள் இழப்பதற்கும், தமிழ் மக்கள் சொத்துக்கள் அழிவதற்கும், மிஞ்சியவர்கள் பிச்சைஎடுப்பதற்கும் காரண கர்த்தா யார்??

இது உலகில் எவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் இதை ஒரு சிலரால் இன்றும் புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடியாத மனநிலை என்றால், ஏதோ ஒரு குறைபாடு அல்லது நோக்கம் உள்ளது என்பதே அர்த்தமாகிறது.

Unfortunately, the Western Tamils are still in a narrow circle. They still have been wasting money and time for useless things and unnecessary decorations for their super men, while a lots of Tamil people in Vanni are begging for a day meal.

It is really big SHAME on Tamil society in the Western countries.

Anonymous ,  November 30, 2013 at 1:47 PM  

Please do not make the tamil public as fools.You need to keep a kind of discipline among your party members.The high command of the party
has the rights to bring its members under the code of discipline.No member has the right to speak as he wants.Mr.Sam is joking with us or may be he doesn't know the administration.So why the hell he remains in the high post..?Does he knows about what is discipliniary action..?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com