Thursday, November 28, 2013

வவுனியாவில் இன ஐக்கியத்திற்கு முன் மாதிரியான இளைஞர் முகாம்

வவுனியா,மணிபுரம் கிராமத்தில் சர்வோதயம் நிறுவனத்தின் சாந்திசேனா இளைஞர் அமைப்பினால் 22.11.2013 தொடக்கம் 27.11.2013ஆம் வரை மாபெறும் இளைஞர் முகாம் நடைபெற்றது.

இவ் இளைஞர் முகாம் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டி எழுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் மாத்தளை மாவட்டத்திலிருந்து சிங்கள இளைஞர், யுவதிகள் வவுனியா மாவட்டம் மணிபுரம் கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டு கிராமத்தின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டு தமிழ் பண்பாடு கலாசாரம் என்பன பரிமாறப்பட்டது.

அத்துடன் மணிபுரம் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் இளைஞர் சக்தியினால் சிரமதானம், வீதிதிருத்தம், குடிநீர் கிணறு திருத்தம் போன்ற வேலைத்திட்டங்கள் செய்யப்பட்டது.

தொடர்ந்து இளைஞர் யுவதிகளுக்கான விளையாட்டு போட்டிகள், கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் தீப்பாசறை நிகழ்வும் இடம்பெற்றது.

இளைஞர் சக்தியினூடாக இனங்களுக்கிடையே ஒரு சினேகப் பூர்வமான உறவை வலுப்படுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்று நேற்றைய தினம் நிறைவு கண்டது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சு.உதயகுமாரன், சர்வோதயத்தின் வடமாகான ஆலோசகர் எஸ்.சுப்பிரமணியம், சர்வோதய சாந்திசேனா திட்ட பணிப்பாளர் எச்.ரவீந்திரகந்தகே ஆகியோரும் கலந்துகொண்டு மணிபுரம் சாந்திசேனா இளைஞர் குழுவிற்கு கணினி வழங்கி நிகழ்வை சிறப்பித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com