Friday, November 29, 2013

நம்­பிக்­கை­யில்லா தீர்­மான வாக்­கெ­டுப்பில் தாய்­லாந்து பிர­தமர் யின்லக் வெற்றி

தாய்­லாந்தின் தலை­நகர் பாங்­கொக்கில் அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் அந்­நாட்டு பிர­தமர் யின்லக் ஷின­வட்ரா பாரா­ளு­மன்­றத்­தி­லான நம்­பிக்­கை­யில்லா தீர்­மான வாக்­கெ­டுப்­பொன்றில் வெற்றி பெற்­றுள்ளார்.
மேற்­படி நம்­பிக்­கை­யில்லா தீர்­மான வாக்­கெ­டுப்பு தொடர்­பான பிரே­ரணை எதிர்க்­கட்­சி­யான ஜன­நா­யக கட்­சியால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், பாரா­ளு­மன்­றத்தில் செல்­வாக்கு செலுத்தும் யின்­லக்கின் கட்சி அந்த வாக்­கெ­டுப்பை தோற்­க­டித்­துள்­ளது.

தாய்­லாந்தில் 2010 ஆம் ஆண்­டிற்கு பின்­ன­ரான மிகப் பெ­ரிய எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தை யின்லக் ஷின­வட்­ராவின் அர­சாங்கம் எதிர்­கொண்­டுள்­ளது.

அந்­நாட்டில் நிலவும் பதற்­ற­நிலை குறித்து கவலை தெரி­வித்­துள்ள ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் நிலைமையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்கு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

யின்­லக்கின் அர­சாங்கம் அவ­ரது சகோ­த­ரரும் ஆட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முன்னாள் தலை­வ­ரு­மான தாக்ஸின் ஷின­வட்­ராவால் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக மேற்­படி ஆர்ப்­பாட்­டத்­துக்கு தலைமை தாங்­கி­வரும் முன்னாள் எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சுதெப் தயுக்­சுபன் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் யின்லக் ஊர­டங்கு சட்­டங்கள், வீதி­களை மூடுதல் என்­ப­வற்­றுக்­கான விசேட அதி­கா­ரங்­களைப் பெற்­றுள்ள அதே­ச­மயம், ஆர்ப்­பாட்டத் தலை­வரை கைது செய்­வ­தற்கு உத்­த­ர­விடப்பட்டுள்ளது. எனினும் சுதெப் தயுக்­சு­பனை கைது செய்­வ­தற்கு இது­வரை எது­வித நட­வ­டிக்­கையும் மேற்கொள்ளப்படவில்லை.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் யின்லக்கிற்கு ஆதரவாக 297 வாக்குகளும் எதிராக 134 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com